உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் - 20

இயைத்தமைகண்டு இது தன்னைப் பயில்வரர் மிக மகிழற் பாலார். எமதிளமைக்காலத்தே இயற்றப்பட்ட இச்செய்யுள் நூல், நாற்பத்தோராண்டுகட்குப்பின் இப்போதுரையுடன் வெளிப்போந்து தமிழுலகுக்குப் பயன்படு மாறருள் புரிந்த முருகப்பிரான் றிருவடிப்போதுகட்கு எமது புல்லிய வணக்கம் உரித்தாகுக!

எட்டாண்டுகட்கு மேலாக இந்நூலின் உரையினைத் திருத்துவதிலும், இதனை அச்சிடுவதிலும் எமக்குண்டான உழைப்புச் சிறிதன்று, பொருட்செலவோ ஐயாயிர ரூபாய்க்கு மேலாயிற்று.இப்பெருஞ்செலவில் ஒருபகுதிக்குப் பயன்படுமாறு, யாழ்ப்பாணந் தெல்லிப்பழையில் தமிழ்க்கலைவல்ல நுண்ணறி வினராய்த்திகழ்ந்த வழக்கறிஞரும் எம் நண்பருமான திருவாளர் தம்பையா பிள்ளையவர்களின் இளையபுதல்வியாரான திருமகள் சிவநாயகியம்மையாரும் அவர்தங்கணவரும் எம்பால் மெய்ப்பொருள் கேட்டஞான்று எமக்கு ஐந்நூறுரூபா காணிக்கை செலுத்தினர். அவர்கள் எல்லாநலங்களுடனும் நீடினிது வாழ்கவென்று அம்பலவாணரம்மை திருவடிகளை வேண்டுதும்.

பல்லாவரம், பொது நிலைக்கழக நிலையம்,

திருவள்ளுவர் ஆண்டு,1972,

மார்கழி,18 (1942, ஜனவரி, 1)

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/31&oldid=1586750" இலிருந்து மீள்விக்கப்பட்டது