உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

275

கொண்டுபோய் மணங் கமழ்கின்ற நீராடுமிடத்தில் நிறுத்திய நேரத்தில்;

-

தபுதல் கெடுதல்; “பறைதபு முதுகுருகு” (180) என்னும் ஐங்குறுநூற்றின் உரையிற் காண்க.

'சில்மொழி', சிலமொழி; “அஞ்சில் ஓதி' (குறிஞ்சிப்பாட்டு, 180) என்புழி “அழகிய சிலவான மயிரினையுடையாய்" என்பர் உரைகாரர் நச்சினார்க்கினியர். “அஞ்சல் ஓம்புமதி” என்னு ஞ் சொற்றொடர் திருமுருகாற்றுப்படையிற் கண்டது (291). ‘காலங் கடந்த கோல வைப்பு' என்றது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் அருளுலகத்தை யென்க; கோலம் அழகு (பிங்கலந்தை). கடைவழி - முடிவுநிலை; ‘அகம் கை' யென்பது நிலைமொழியின் முதலொழிய ஏனையவெல்லாங் கெட்டு மெல்லினம் மிகுந்து ‘அங்கை' யென நின்றது; இது,

“அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்

வரைநிலை யின்றே யாசிரி யர்க்க;

மெல்லெழுத்து மிகுத லாவயினான

(புள்ளிமயங்கியல், 20)

என்னுந் தொல்காப்பியத்தால் முடிக்கப்படும். 'அகங்கை' யாவது உள்ளங்கை; "அங்கையுள் நெல்லி' (புறப். வெ. 2: 13) என்புழிப்போல; தோழமையான அன்பை விளக்குதற்கு ‘அங்கைபற்றி’ யெனப்பட்டது.

மணப் பண்டங்கள் நிரம்பப் பயில்கின்றமையின், நீராடு துறை மணங் கமழ்வதாயிற்றென்க. கொங்கு-மணம்; “கொங்கலர் பூம்பொழில்" (சிலப்பதிகாரம் 10, 220) என்பதன்கண் இச்சொல் இப்பொருட்டாதல் தெளியப்படும்.

(146-154) கார்மின் அனைய ஏர்கெழு மகளிர் குறுநகை மிளிர என் அருகில் போந்து - கார்காலத்து மின்னலைஒத்த அழகு பொருந்திய இளமகளிர் புன்னகை விளங்க என்பக்கத்தில் வந்து, மாசுபொதிந்து பாசி ஆகி ஈரும்பேனும் தீராதுஉறையும் என் புன்தலைக் குஞ்சி புணர்ப்புஅற உளரி - அழுக்கு நிரம்பிப் பாசியாய் ஈரும் பேனும் நீங்காது உயிர்வாழும் எனது சிவந்த தலையிலுள்ள மயிரைச் சிக்கறக்கோதி, புழுகுநெய் உரைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/300&oldid=1587044" இலிருந்து மீள்விக்கப்பட்டது