உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 20

நசை - வேட்கை, அகநானூறு, 22; உயிர்கள் மும்மலப் பிணி தீர்ந்து தன் றிருவடிப் பேரின்பத்தைப் பெறல் வேண்டுமென்னும் வேட்கையொடு நோக்குதலின் 'நசைகெழு விழிகள்' என்றார்.

-

-

(129-136) கண்டு நனி - அப்பெருமானை நன்றாகக் கண்டு, மெய்ந்நிலைத் தொண்டர் தம் நிலை அறியார் - உண்மையான தவநிலை வாய்ந்த அடியார்கள் தமது நிலை தெரியாமல் உணர்விறந்தவராய், விழிநீர் சிந்த - தம் இருகண்களும் நீர் சொரிய, மொழி இடைகுழற பேச்சுகள் இடையிடையே தெளிவின்றித் தடுமாற, உச்சிக் கூப்பிய கையினர் - தலைமேற் குவித்த கையினராய், பழிச்சி - பரசி, அருள் குறிப்பு உணர்ந்து - திருவருட் குறிப்பை உணர்ந்தபடியாக, ஆங்கு அமைவொடு நிற்ப - அங்கு அமைதியாய் நிற்க, வெருவரு நோக்கமொடு மரம் போலாகி அருணிலை உணரேன் தெருளின்றி ஓடிக் குடந்தம் கொண்டு எதிர்நின்றென னாக - அடியேன் அஞ்சுதலுள்ள பார்வையுடன் மரம்போல் உணர்விழந்து திருவருணிலை தெரியேனாய்த் தெளிவின்றி விரைந்தோடிக் 'குடந்தம்' என்னும் வணக்கங் கொண்டு அப்பெருமான் றிருமுன் நின்றேனாக;

குழறல் - தெளிவில்லாப் பேச்சு.

'நன்றாய்க் கண்டு' என்றற்கு நனிகண்டு எனப்பட்டது. 'கையினர்' முதலியன, முற்றெச்சம்; பழிச்சுதல் ஏத்துதல்; 'குடந்தம்' என்பது முன்னும் விளக்கப்பட்டது.

(137-145) மடம் தபு சில் மொழி மகிழக் கூறி அறியாமை கெடுக்குஞ் சில இன்சொற்களை அடியேன் மகிழும்படி திருவாய் மலர்ந்தருளி,அன்புறு புலவோய் - அன்புமிக்க புலவோய், அஞ்சல் ஓம்புமதி - அஞ்சுதலை நீ ஒழிப்பாயாக, காலம் கடந்த கோல வைப்பில் நிகரா இன்பம் மிகைபட நுகர்ந்து கடைவழியில்லா நிலையொடு பொலிகுவை - கால வரம்பில்லாத அழகிய மேல் உலகத்தில் இணையில்லாத பேரின்பத்தை நிரம்பநுகர்ந்து இறுவாயில்லா நிலையுடன் நீ நிலையாய் விளங்குவாய், என்று பல நல்லுரை பின்றையும் கூறித் தன் மருங்கு இருந்தோன் குறிப்ப என்று பல நன்மொழிகள் பின்னும் மொழிந்த தன் பக்கல் இருந்தோனான ஏவளாளனொருவற்குக் குறிப்பிட, அவனும் என் அம் கை பற்றிச்சென்று கொங்குகமழ் நீராடு துறையில் நிறுவிய அளவை - அவ்வேவலாளனும் என் உள்ளங் கையைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/299&oldid=1587043" இலிருந்து மீள்விக்கப்பட்டது