உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

273

எழுப்பிய அரியணை மீது - அவ்விரிப்பின் நடுவில் நிறுத்தப்பட்ட சிங்கக் கட்டிலின்மேல்;

66

66

-

-

ஓவியம் சித்திரம். கழங்கு கழற்சிக்காய் (திவாகரம்), அணங்கறிகழங்கில்” நற்றிணை, 8. காழ் - கோவை, வடம், 'ஒருகாழ்முத்தம் இடைமுலைவிளங்க” அகநானூறு,73.

பெருந்தண் கண வீர மாலை, நறுந்தண்மாலை எனப் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினிய ருரையே ஈண்டைக்கும் உரையாக வைக்கப்பட்டது.

-

கணவீரம் செவ்வலரி; "பெருந்தண் கணவீர நறுந் தண்மாலை” (236) எனத் திருமுருகாற்றுப்படையின்கண் இத்தொடர் இங்ஙனமே வருதல் நினைவுகூரற்பாற்று. 'எலிமயிர்’ என்பது, வெள்ளெலியின் அடிவயிற்றிலுள்ள மிக மெல்லிய வெண் மயிர்; எலிமயிர் கொண்டு ஆடை முதலியன நெய்தல் சிலப்பதிகார வுரையின்கண்ணும் (14: 205), “செந்நெருப்பு உணுஞ் செவ்வெலிம் மயிர், அந்நெருப்பளவு ஆய் பொற் கம்பலம்' என்னுஞ் சீவக சிந்தாமணியின் கண்ணுங் (2686) காணப்படும்.

(123-129) வெம் கதிர் ஞாயிறு மணிநெடும் கோட்டில் தங்கியிருந்த தகைமை போலவும் - வெப்பம் மிகுந்த கதிர்களை யுடைய பகலவன் நீல நிறம் பொருந்திய - உயர்ந்த கீழ்மலை யுச்சியில் வைகித்தோன்றிய தன்மைபோலவும், வான் கதிர் மதியம் மீன் குழாம் சூழத் தான்பொலிந்து எழுந்த தலைமைபோலவும் - வானத்தின்கண் உள்ள தண்கதிர் நிலவு விண்மீன் கூட்டஞ் சூழத் தான் விளங்கித் தோன்றிய தலைமைநிலை ஒப்பவும், அறுமுகத் தொருவன் குறுநகை இலங்க - ஆறு திருமுகங்களையுடைய ய ஒப்பற்ற கடவுள் புன்னகை விளங்க, நசைகெழு விழிகள் திசைமுகம் பரப்பி - விருப்பம் மேவிய தன் பன்னிரு விழிகளைத் திசைகடோறுஞ் சூழப்பார்த்து, குன்றாத் திருவொடும் விளங்க - குறையாத அழகோடும் அங்கெழுந்தருளி விளங்கா நிற்பவென்க. 'மணி' நீலமணி, அஃதிங்கு நீல நிறத்தின் மேலாயது

ஆகுபெயர்.

தகைமை போலவுந், தலைமை போலவுங் குன்றாத் திருவொடும் விளங்கவெனக் கூட்டுக. 'எழுந்த' இங்குத் தோன்றிய வென்னும் பொருட்டு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/298&oldid=1587042" இலிருந்து மீள்விக்கப்பட்டது