உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

66

மறைமலையம் - 20

‘வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்

தென்மலைப் பிறந்த சந்தன மறுக

எனவருஞ் சிலப்பதிகாரத் (அந்திமாலை. 37-8) திருமொழிக்கு அதன் அரும்பத உரையாசிரியர் இங்ஙனமே பொருளுரைப்பர்.

வகைவிரை’ ஆவன; ‘கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்' என்பவை (பிங்கலந்தை); தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கர்ப்பூரம் என்னுந் திவாகரமும், அடியார்க்கு நல்லாருரையும் (சிலப்பதிகாரம், 5, 26).

'ஒய்யென விரைவுப்பொருட்டு, “நுங்கையது கேளா வளவையொய்யென” (152) என்பது பொருநராற்றுப்படை.

'துருத்தி', பன்னீர்ப்புட்டில் போல்வதாகத் தோலிற் செய்யப் பட்டு மணக்குழம்பு பீச்சுங் கருவி; இத்தகையதொரு கருவி பண்டைக் காலத்திலேயே உண்டென்பது, “நெய்மாண் சிவிறியர்” (பரிபாடல், 6, 34) என்பதற்கு "உள் விட்ட புழுகு நெய்யான் மாண்ட துருத்தியராய்" எனப் பரிமேலழகியார் கூறிய வுரையான் அறியப்படும்.

உறைப்ப-மிகவிழ, பெரும்பாணாற்றுப்படை (379) உரை.

(114-122) வாழையும் கமுகும் வயின்வயின் நாட்டி - வாழை மரங்களும் பாக்குமரங்களும் இடங்கடோறும் நிறுத்தி, ஓவிய நுட்பமும் ஒண்பணிநுட்பமும் மேவிய படாஅம் மேலுறக்கட்டி- ஓவிய நுட்பங்களும் ஏனைப் பின்னல் முதலிய அழகிய தொழில் நுட்பங்களும் பொருந்திய திரையை மேற்பரப்பில் அணையக் கட்டி, கழங்கு புரை நித்திலம் இலங்கத்தூக்கி - கழங்கு என்னும் ஒருவகை விளையாட்டுக் கருவியைப்போன்ற பருமுத்தங்களைக் கோவையாக விளங்கத் தொங்கவிட்டு, கேழ்கிளர் பன்மணி காழ்பட நாற்றி - அங்ஙனமே நிறம் மிகுந்த பலமணிகளைக் கோவையாகத் தொங்கவைத்து, பெரும் தண் கணவீர நறும் தண் மாலை பால்வேறு மரபில் பலபட இயற்றி - பெரிய குளிர்ந்த - செவ்வலரி மாலையையும் ஒழிந்த நறிய குளிர்ந்த மாலைகளையும் பலவகையான வியல்பிற் பலவேறு வகையாக அங்கங்கும் அழகுபெற அமைத்து, எலிமயிர்க் கம்பலம் நிலனுற விரித்து - எலிமயிரினாலான விரிப்பை நிலம் படிய விரித்து, விரியிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/297&oldid=1587041" இலிருந்து மீள்விக்கப்பட்டது