உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

271

முழவின் ஒரு பக்கத்தே பூசப்படும் பசையொடுகூடிய மண்ணை மார்ச்சனை யென்பர் (சிலப்பதிகாரம்,10,139).

6

"மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்

ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க”

என்னும் பொருநராற்றுப்படை (110) யடியுரையிலும் நச்சினார்க் கினியர் மண் என்பதற்கு மார்ச்சனை என்றும், பாணி என்பதற்குத் தாளம் என்றும் பொருளுரைப்பர்.

66

துருவல் - கடைந்து துளைத்தல், இவ்வாறு செய்தலைத் 'துருவித் துளைத்தல்” என்பர் அடியார்க்குநல்லார் (சிலப்பதி காரம், ஆய்ச்சியர் குரவை, “கொல்லையஞ்சாரல்” உரை)

(106-107) செந்நெருப்பு ஆர்ந்த பொன் உரைத் தடவில் - சிவந்த நெருப்பு நிறைந்த பொன்பூச்சுப் பூசிய தூபக்காலில், அகில் நெய் பெய்து பலர்நின்று புகைப்ப - அகில்நெய் ஊற்றிப் பலர்நின்று புகைப்பவும்;

L

'செந்நெருப்பு' என்றது, கனல் மிக்க நெருப்பை; உரை - பூச்சு; தடவு - தூபக்கால், இச்சொல் இப்பொருள் பயத்தல், “மடவரன் மகளிர் தடவுநெருப் பமர்ந்து” (ஊர்காண், காதை 99) என்னுஞ் சிலப்பதிகாரத்தால் உணரப்படும்.

-

-

(108-113) வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்து வடக்கு மலை யெனப்படும் இமயமலையின்கண் உண்டான பெரிய ஒளியுள்ள வட்டக்கல்லின்கண், தென்மலைப் பிறந்த நறும் குறடு உரைத்து தெற்குமலை யெனப்படும் பொதியமலையில் விளைந்த மணமுள்ள சந்தனக் கட்டையைத் தேய்த்து, விழுமிய திரட்டிய செழுநறும் குழம்பில் - சீரிதாகத் திரட்டியெடுத்துக் கரைத்த செழுமையான நறுமணக் குழம்பில், ஐவகை விரையும் விராஅய் - ஐந்துவகையான மணப்பண்டங்களுங் கலந்து, ஒய் எனத் துருத்திப் பெய்துசெறிப்ப - சுருக்காகத் 'துருத்தி' யென்னும் ஒருவகைத் தெளிக்குங் கருவியில்விட்டு நிரப்ப, பலர் நின்று தலைப்பெயல் மாரியின் மலைச்சாந்து உறைப்ப பலபேர் வரிசையாய் நின்று கார்காலமுதலிற் பொழியும் மழையைப் போல் அப் பொதியமலைச் சந்தனக்குழம்பைச் சொரிய;

'வான்கேழ் வட்டம்' என்பதற்கு அழகுகெழுமிய வட்டக்கல்' எனப் பொருளுரைப்பினுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/296&oldid=1587040" இலிருந்து மீள்விக்கப்பட்டது