உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

  • மறைமலையம் - 20 -

-

மின் புனை மகளிர் நிரல்பட நிற்ப மின்னொளியினால் அமைக்கப்பட்டா லெனத் திகழும் இளமகளிர்கள் வரிசையாய்

நிற்ப;

‘விளக்கம்' என்பது இருமடியாகுபெயராய்க் கருவியை யுணர்த்தும். 'மின்புனை’ யென்புழி ‘புனை' உவமப்பொருளில் வந்தது.

புனைதல்- செய்தல், “வரிமணற் புனைபாவைக்கு”, புறநானூறு, 17.

(98-101) கைவல் பாடினி - யாழ் இசைத்தலிற் கைதேர்ந்த பாண்மகள், கறை அறப் பெற்ற பயன்உடை எழால் நலனுற மரீஇ - குற்றம் நீங்கப்பெற்ற பயனுள்ள யாழை அழகுண்டாகத் தன்மருங்கே இருத்தி, விரல் நுதிதெறித்த - தன் விரல் நுனிகளாற் சுண்டிய, நரப்பு இசைநோக்கி - நரம்புகளின் இசைதெரிந்து, மிடற்றொலி பொருத்தி நெறிப்பட மிழற்ற தன் குரலோசையை இணைத்து ஓசைகள் முறைப்பட இசைப்பவும்;

னி

-

பாடினி பாடும்பெண்; இசைபாடுதற்கெனவே ஒருகுலம் ‘பாண்குலம்’ என்று பண்டைநாளில் இருந்தமையின், 'பாடினி' யென்பாள் பாண்குலப்பெண்ணாவா ளென்க. கறை - குற்றம்; எழால் - யாழ்; ‘பயனுடைய எழால்' என இங்குவந்தாற்போலவே “பாடல்பற்றிய பயனுடைய எழாஅல்” எனப் பொருநராற்றுப் படை (56) யினுள்ளும் வருதல் நினைவுகூர்க. மருவுதல் அணுகுதல் (திவாகரம்), மழீஇ ‘தெறித்தல்', இங்கு மீட்டல்.

சொல்லிசையளபெடை.

(102-105) உரும் அதிர்ந்தன்ன மண்கனை முழவமும் - இடி இடித்தாற்போல் ஒலிக்கும் மார்ச்சனையுடைய திரண்ட மத்தளமும், வரைவேய் துருவிய உரைகெழு குழலும் - மலை மூங்கிலைக் கடைந்து துளைத்த புகழ்பொருந்திய புல்லாங் குழலும், பேணுறுமரபின் பாணியும் - இன்னும் போற்றற்குரிய தன்மைகள் வாய்ந்த தாளம் முதலிய இசைக்கருவிகளும், வல்லோர் - இசைக்கவல்ல இசைத் துணைவர்கள், பால்கெழு மரபின் சீரிதின் இயக்க - அவ்வவற்றின் பாகுபாடுகள் விளங்குந் தன்மையிற் செவ்வனே யியக்கவும்;

‘மண்கனை முழவம்' என்பதற்கு 'மார்ச்சனையையுடை திரண்ட முழவு” என்று அடியார்க்குநல்லார் பொருளுரைத்தார்;

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/295&oldid=1587039" இலிருந்து மீள்விக்கப்பட்டது