உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

269

நிலத்தைத்

நிலம்தொட வீழ்ந்த பொலம்துகில் அசைஇ தொடுபடை வீழ்ந்த பொற்பட்டாடையினை உடுத்து, சாந்து புலர் மார்பில் பூ தொடை புரள -பூசிய சந்தனம் ஈரங் காய்ந்த மார்பின்கட் பூண்ட பூமாலை அசைய, ஏறு செல் செலவின் வீறுபடப் போந்த - சிங்கவேறு நடக்கும் நடையைப்போலப் பொலிவுண்டாக நடந்துவந்து,யாரையோ புலவோய் - யாரையோ அறிவோய், அறுமுகத்து ஐயன் புகுத்துக நின்னையென்று அருளினன் - ஆறு திருமுகங் களையுடைய முருகக் கடவுள் உட்செலுத்துக நின்னையென்று கட்டளையிட்டயருளினன், போதி என்று வருவாயாகவென்று., று., இன்உரை ஒருவன் பகர இனிய வரவேற்பு மொழியை அங்குவந்த ஏவலாள னொருவன் சொல்ல, அதன் எதிர் சொல்லுவது அறியேன் மெல்லெனப் புக்கு அவன் மொழிக்கு எதிராகச் சொல்லுவதொன்றுந் தெரியே னாய் மெல்லெரன உள்நுழைந்து;

-

"சுருளிருங் குஞ்சி பொன்ஞாணிற் பிணித்து” என்னுஞ் சொற்றொடர் இறையனாரகப் பொருளுரையிற் (2-ஆஞ் சூத்திரஉரை) மாண்டது.

மறத்திற் சிறந்த ஏவலாளனேபொற்கயிற்றினால்தன் தலைமயிரைச் சேர்த்துக்கட்டிப்,பொன்னாடையுடுத்தவனாய்ச், சந்தனம் பூசிக்காய்ந்த தன்மார்பின்மேற் பூமாலை புரள ஆண்சிங்கம் போன்ற நடையினனாய் வந்தனனென்பது கூறவே, அவ் வேவலனையுடைய தலைவன் றன் செல்வவளமும் வீறும் இன்னும் எத்துணை மிகுதியவாமென்பது தானே புலப்படும்.

-

வீறு - பொலிவு; “சாறயர்களத்து வீறுபெறத் தோன்றி” திருமுருகாற்றுப்படை,283.

யாரையோ’ யென்பதில் ஐ ஓ அசை; "நம்பி நீ யாரை

என்றாள்’

சீவகசிந்தாமணி, 835. புகுத்துதல் - உட்செலுத்துதல். போதி-வருதி முன்னிலையேவல்; போதுதல் - செல்லுதல் வருதல் இனி அங்கு முருகப்பெருமான் வீற்றிருந்த திருக்கோலச் சிறப்பு 133-ஆம் அடிகாறும் விரித்துரைக்கப்படுகின்றது.

(96-97) பொன் புனை விளக்கம் தம் கையின் ஏந்தி பொன்னாற் செய்யப்பட்ட விளக்குகளைத் தங்கள் கைகளில் ஏந்தி,

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/294&oldid=1587038" இலிருந்து மீள்விக்கப்பட்டது