உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் - 20

சிறுசிறு வேடிக்கைப்பாட்டுகள் பாடி, வயின்வயின் நின்று இடங்கடோறும் நின்றபடியாய், மகிழ்வொடு குறுவவும் மகிழ்ச்சியொடு மணல்நெல் குற்றவும்

கரும்பையே உலக்கையாகக் கைப்பற்றி மணலையே

நெல்லாகக் குவித்து விளையாட்டயர்வர் என்றவாறு

அதனாற்

குற்றிச்

சிறுமியர்

வெண்மணலையொப்ப மீன்சினைகளும் வெண்மையும் மென்மையும் நுண்மையும் உடையவாதல் இங்கு நினைவுகூரற் பாலது. குறுதுல் குற்றுதல், இடித்தல்; “மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே' என்றார் குறுந்தொகையிலும், 89: “கொல் யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாம்நாம்” என்றார்

கலித்தொகையிலும், 42.

(82-83) அழகுசால் நெய்தல் நலம் உற மருவிய ஒற்றி மாநகரில் - இங்ஙனமெல்லாம் அழகு நிரம்பிய நெய்தல்நில இயல்புகள் செம்மையாகப் பொருந்திய திருவொற்றி மாநகரின் கண்;

(83-87) பொன்தொழில் பொலிந்து விண்தொட நிவந்த இஞ்சி வளைஇய உருகெழு திருநகர் காண்டொறும் பரசி பொற் பூச்சுக்களாலான தொழிற்பாடுகள் அழகுபெற விளங்கி வானந்தொட்டு உயர்ந்த மதில்கள் வளைந்த தோற்றஞ் சான்ற திருக்கோயிலைப் பார்க்கும் போதெல்லாந் தொழுது, மலை குயின்று அன்ன நிலை உயர் தலைக் கடை மலைகளைத் துளைத்து அமைத்தாற்போன்ற வாயில்நிலைகள் உயர்ந்த திருக்கோபுரவாயிற்படியின்கண், அஞ்சுவரு நோக்கமொடு நின்றெனனாக அஞ்சுதலுள்ள பார்வையுடன் ஒதுங்கி நின்றேனாக

-

இஞ்சி- மதில், திவாகரம். குயின்று என்பதில் முதனிலை குயில் அது துளைத்தல் எனப் பொருள்படும், "குன்று குயின் றன்ன ஓங்கு நிலை வாயில்' என்பது நெடுநல்வாடை, 88.

'நகர்' இங்குக் கோயில்; "முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே எனப் புறநானூற்றின்கண்ணும் (6) வந்தது.

(88-95) சுருள் இரும் குஞ்சி

-

கடை குழன்ற கரிய தலை

மயிரை, பொன்ஞாண் பிணித்து பொன்னாலான கயிற்றாற் கட்டி

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/293&oldid=1587037" இலிருந்து மீள்விக்கப்பட்டது