உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

அயர்தல் - செய்தல், (திவாகரம்)

267

(68-77) வெண்தோடு விரிந்த கைதை அம் தாது மெய்படத் திமிர்ந்த நொய்சிறை வண்டினம் - வெண்ணிறமான மடல்கள் விரிந்த தாழம்பூவின் மகரந்தப்பொடிகள் உடம்புமுழுதும் படும்படி பூசிக் கொண்ட மெல்லிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள், விலை அறு முத்தமொடு தலைமயக்குற்றுக் கண்மயக்கேறி எண்ணிலகிடப்ப - அந்நிலத்தில் உண்டான விலையில்லா முத்துக்களுடன் ஒருங்குகலந்து தேன் உண்ட மயக்கந் தலைக்கேறி எண்ணற்றன ஒரே நிறமாய்க் கிட கிடப்ப, நுளைச் சிறு மகளிர் வளைக்கையின் வாரி - நெய்தல் நிலத்துச் சிறு பெண்கள் தம்முடைய வளையலணிந்த கைகளால் அவற்றை அள்ளிச் சேர்த்து, குடம்புரை பணிலம் நிரம்பப் பெய்து குடத்தை ஒக்குஞ் சங்குகளினுள்ளே நிறையச் சொரிந்து, ஆமை அடுப்பில் ஆம்பல் நெருப்பின் தாம் அறி திறத்தால் அடுவுழி ஆமை ஓட்டினாலான அடுப்பின்கண் செவ்வாம்பற் பூவாலான நெருப்பில் தாமறிந்த வகையாற் சமையல் செய்யும்பொழுது, மயக்கு அற்றுத் துண்ணெனப் பறந்து விண்ணிடைச் செல்ல - அவ்வண்டுகளெல்லாம் கள்ளுண்ட மயக்கம் ஒழிந்து திடுமெனப் பறந்து வான்வெளியிற் செல்ல வியப்பிடை எழுந்த மயக்கொடு நிற்கவும் - அம்மகளிரெல்லாம் வியப்பூடெழுந்த மதிமயக்கத் தொடு நிற்கவும்;

‘திமிர்தல்', பூசிக்கொள்ளுதல், (மணிமேகலை, 19, 86). நொய்மை - மென்மை; வண்டுகள் தாதுதிமிர்ந்து வெண்ணிற மாய்த் தேனும் உண்டு அறிவுமயங்கி முத்துக்களோடு முத்துக் களாய் வேற்றுமை அறியப்படாமற் கிடந்தன. தலைமயங்கல் ஒருங்குகலத்தல், “புகையவுஞ் சாந்தவும் பூவிற் புனைநவும், வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய” (சிலப்பதிகாரம்,14,177, 178.) இங்குக் காட்டப்பட்ட நெய்தல்நிலச் சிறாரின் விளை யாட்டியல்புகள் பெரிதும் உற்றுணர்ந்து மகிழற்பாலன.

(78-81) வேறுசிலர் சிறுமியர் - வேறுசிலரான நெய்தல்நிலச் சிறுபெண்கள், சாறுகெழு கரும்பின் - சாறு நிரம்பிய கரும்பையே உலக்கையாகப்பற்றி, மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇ- மீன் முட்டைகளைப்போன்ற வெண்ணிறமான நொய்ய மணல்களை நெல்லாகக் குவித்து, தேம்பொதி மழலையொடு சிறுபாட்டு இசைத்து - இனிமை நிறைந்த மழலைமொழிகளுடன்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/292&oldid=1587036" இலிருந்து மீள்விக்கப்பட்டது