உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

  • மறைமலையம் 20

உலகில் மிக உளரென்று இதன்கட் குறிப்பித்தவாறாம்.

(61-64) அதனால் ஆதலினால், அவர்கடை தொறும் நித்தலும் படர்ந்து - அவ் வியல்பினாருடைய இல்லின் கடைவாயில் தோறும் நாளுஞ்சென்று, வாய்வாளாது வல்லாங்குப்பாடி வாய் சும்மா இராமல் வல்லவாறெல்லாம் பாட்டுகள் பாடி, கொன்னேதிரிதல் இன்னாது மன் - வீணே அலைதல் தீயதாம் மிகவும்; மற்று, ஓ அசை.

-

வல்லாங்கு வல்லபடி; “வடியநாவின் வல்லாங்குப்பாடி' (47) என்பது புறநானூறு. பயனும் இன்றி இழிவும் நேர்தலின், அங்ஙனம் படர்ந்து பாடித்திரிதல் இன்னாதாயிற்று.

என்றிதுகாறுந், தம்மை எதிர்ப்பட்ட புலவனைநோக்கி, அறிவும் ஈகையறங்களும் உள்ள செல்வர்களாதல் அறிஞர் களாதல் இல்லையாய்க், கல்வியறிவில்லாதவரும் பிசுனருமே பலராய் நிரம்பிய இஞ்ஞான்று நிலையுதல் இல்லாப் பொருள்பெற வேண்டி அத்தகையோரை நச்சிநச்சி உயர்ந்த செந்தமிழ்ப்பாக்கள் பாடி அவர்பாற் செல்லுதல் பெரிதுந் தீதாதல் கூறினார். அதன்பின் எல்லாம்வல்ல முருகப்பெருமான் றிருவருளை விழைந்து சேறலே நன்றாமெனக் கூறுவான் றாடங்கி முதற்கண் அப்பெம்மான்றிருக்கோயில் கொண் டெழுந்தருளியிருக்குந் திருவொற்றிமாநகர்ச் சிறப்பினை நுவல்கின்றார்.

(65-67) கொழுநனை அரும்பிய காஞ்சி அம் கோட்டில் காழுமையான மொட்டுகள் அரும்பிய காஞ்சிமரக் கிளையில், புன்தலைச் சிறுவர் ஏறித் துன்றுகடல் சுரிதிரைப்பாய்ந்து விளையாட்டயரவும் - எளிய தலையினையுடைய நெய்தற் சிறுவர்கள் ஏறி அக்கிளையின் அருகிலுள்ள கடலின்கட் சுருளும் அலையிற் குதித்து நீர் விளையாடுதலைச் செய்யவும்;

'காஞ்சி' இது மருதநிலத்திற்குரியமரம் என்பது சிறுபாணாற்றுப்படையாற் (179) புலனாகின்றது; அஃது இங்கு நெய்தல் நிலத்துக்கண் வந்தது கருப்பொருள் மயக்கம்; திணைமயக்குறுதலுங் கடிநிலையிலவே” என்னுந் தொல் காப்பிய அகத்திணையியற் சூத்திரத்தால் அமைக்கப்படும்.

66

புன்றலைக்கு விளக்கம் முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

து

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/291&oldid=1587035" இலிருந்து மீள்விக்கப்பட்டது