உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

பதினாறு நூறாயிரம்பொன் பரிசு அளித்தான்.

265

‘பரணர்’ என்னும் புலவர்பிரான் ‘பதிற்றுப்பத்’தில் ஐந்தாம்

பத்துப் பாடிக், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் ம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும்

பரிசில் பெற்றான்.

இன்னோரன்ன பழைய பரிசில் வரலாறுகள் கணக்கற்றன உள; அவையெல்லாம் இங்கு விரிப்பிற் பெருகும்.

"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்நாடு

முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்"

எனவரும் (புறநானூறு, 110) பழந்தமிழிலக்கியத் திருமொழிகளும் இங்கு நினைவுகூரற்பாலன.

(57-59) மெய்யொடு மிடையாப் பொய்பொருள்ஈட்டி மெய் வழிகளொடு கலவாத அழியும்பொருள்களைத் தொகுத்து, தாம் அறி அளவையில் பிறர்க்கு ஒன்று ஈயாது தாமறிந்தவரையில் தக்கார்க்கு ஒன்று கொடாமல், தாமே நுகரும் தீயரோ உளர்- தாமே நுகர்கின்ற தீய இயல்பினரோ மிகப்பலராய் இருக்கின்றனர். ‘தீயரோ' என்பதில் ஓகாரம் மிகுதிப்பொருள்.

-

மிடை யா கலவாத; மிடைதல் - கலத்தல், “பொய்யோ டிடைமிடைந்தசொல்" (நாலடியார், 80) என்புழிப்போல.

'தம் மனச்சான் றறிய ஒன்றுங் கொடார்' என்றற்குத் 'தாமறி யளவையிற் பிறர்க்கொன் றீயாது' என்றார். அன்றி அதற்குத் 'தமக்குத் தோன்றிய அளவிலாயினும் ஏதேனுங் கொடாமல்’ என்று பொருளுரைத்தலுமாம். 'பொய்பொருள்' என்புழிப் பொய்மை நிலையாமைப் பொருளில் வந்தது.

(60-61) தமிழ்வழக்கு அறியாது - செந்தமிழ் வழக்குகளின் நுட்பமும் ஆழமும் பரப்பும் விழுப்பமும் அறியமாட்டாமல், அமைவு இல கூறும் - பொருத்தமில்லாதவற்றைப் பேசும், கற்றறிவு இல்லார் இனிப் பலர் கற்றறிவில்லாதவரே இப்பொழுது மிகப் பலராவர்; ஏகாரந் தொக்கது. 'மற்று' அசை.

செந்தமிழைக் கல்லாதவர் அதன் றிறமறியாராகலின், பொருந்தாதனவெல்லாம்பேசி இகழ்தலுஞ் சய்வர். செந்தமிழுக்கு நன்மை செய்யாமையொடு தீமையுஞ் செய்வாரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/290&oldid=1587034" இலிருந்து மீள்விக்கப்பட்டது