உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

  • மறைமலையம் - 20

-

(51-53) குறுநடைப் புறவின் தபுதி கண்டு அஞ்சி தன்னை அடைக்கலமாய்ப்புக்க சிறிய நடையினையுடைய ஒரு புறாவின் அழிவினைக்கண்டு அதற்கு அஞ்சி, குருதி கெழு பைம்தடி முறைமுறை தடிந்து - செங்குருதி தோய்ந்த தனது உடம்பின் பச்சைத் தசையை அதற்கு ஈடாகும்படி சிறிது சிறிதாக அறுத்துவைத்து, கன்னம் புக்கு ஏறிய மன்னனும் இலனே அங்ஙனம் வைத்தும் அஃது ஈடாகாமையின் முடிவில் தானே நிறைத்தட்டில் தாவியேறி அம்முகத்தால் ஈடுசெய்து அதனைப் பிழைப்பித்த ஒரு சோழவேந்தனும் இன்று வாழ்ந்திலனே!

திறம்,

இங்ஙனம் உயிர்கொடுத்துப் புறவுகாத்த பெருங்கொடைத்

“தன்னகம் புக்க குறுநடைப் புறவின் றபுதி யஞ்சிக் சீரை புக்க

எனப் புறநானூற்றின்கண்ணும் (43) சிறப்பிக்கப்படுகின்றது.தபுதி அழிவு. தடி- தசை; கன்னம் - நிறைத்தட்டு.

தமிழறிஞர்களின்

(54-56) அரும் தமிழ்ப் புலவோர் பெரும் திறம் உணர்ந்து- அருமைவாய்ந்த பெரியமேன்மையை உணர்ந்து பார்த்து, பொன்னும் மணியும் தண்ணடை நிலனும் வரையாது வழங்கிய அரசரும் இலரே - அவர்கட்குப் பரிசாகப் பொன்னும் மணியும் மருதநிலத்தூர்களும் வயல்களும் ஏராளமாய் உதவிய புரவலர்களும் இஞ்ஞான்று வாழ்ந்திலரே!

-

திறம் - மேன்மை, “சோதி திறம்பாடி,” திருவாசகம், 7, 57. தண்ணடை மருதநிலத்தூர் (திவாகரம்). 'வரையாது வழங்கிய’ வென்றது, அளவுபாராமல் ஈந்தவென்னும்பொருட்டு. இங்ஙனம் வரையாது வழங்கிய அரசர்கள் பண்டிருந்தன ரென்னும் உண்மைக்குச் சான்று வருமாறு;

‘பதிற்றுப்பத்து' என்னும் நூலில் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் என்னும் புலவர் பெருமானுக்குச் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் என்னும் வள்ளல் நூறாயிரங் காணமும் ஒரு குன்றேறிக் கண்ட நாடும் பரிசில் கொடுத்தான்.

ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் என்னும் மாப்பெரும் புலவர்க்கு அவர் இசைத்த ‘பட்டினப்பாலை' யென்னும் நூலின் செழுந்தமிழ்த் திறம் உணர்ந்து சோழன் கரிகாற் பெருவளத்தான்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/289&oldid=1587033" இலிருந்து மீள்விக்கப்பட்டது