உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை சிலதர்-ஏவல்செய்வோர்;“நன்கனி சிலதன் உண்ணநச்சுவேன்’ (முத்தி, 127) என்னுஞ் சிந்தாமணியில் இச் சொற்பொருள் காணப்படும்.

துன்னல் - தைத்தல்; சிதார் - கந்தை; வேற்றிழைநுழைந்த வேர் நனை சிதாஅர்” (69) என்பது புறநானூறு; 'துன்னல் சிதாஅர்’ என இங்கு வந்தாற்போலவே,

“வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னற் சிதாஅர் துவர நீக்கி”

என இங்ஙனமே பொருநராற்றுப்படையில் (81) வருதல் நினைவு கூரற்பாலது.

அரவுரி, மென்மைக்கும் வெண்மைக்கும் உவமை; 'உரி', முதனிலைத் தொழிலாகு பெயராய்த் தோலை உணர்த்தும்; அட்டி - அப்பி; “அளிநீடளகத்தின் அட்டியதாதும்" என்றார் திருக்கோவையாரிலும். தகை அழகென்னும்பொருட்டு.

'பிணையல்' என்பது மலர்களின் காம்புகளிரண்டையும் எதிரெதிரே ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துப் பிணைத்துக் கட்டும் L மாலையாகும். 'பிணையன்மாலை' யெனவுங் கூறப்படும். ‘தூமலர்ப் பிணையன்மாலை' (பெரியபுராணம், தடுத்தாட்கொண்ட. 18) என்பதன் உரையைக் காண்க.

ஆகவே இங்ஙனங் கட்டுஞ் சரங்கள்

66

-

-

-

(164-174) குமரி வாழையின் குருத்தகம் விgஇ-இளமையான வாழையின் குருத்தை உள்விரித்து, அறுசுவைக்கறிவும் ஆறு வேறு சுவையுள்ள கறிவகைகளும், அடிசிலும் சோறும், துவையும் துவையலும், வெறிகமழ் கனியும் - மணம் வீசுகின்ற முப்பழமும், நறுநெயும் நல்லநெய்யும், பாலும் -ஆவின்பாலும், தீம் சுமைத் தயிரும் - இனிய ஏட்டுத்தயிரும், தேம் கனி பழனும் - தித்திப்புக் கனிந்த ஏனைப் பழவகைகளும், கன்னலும் சருக்கரையும், பிறவும் - பிற தின்பண்டங்களும், துன்ன இயற்றி - நெருங்கப்படைத்து, கடும் பசிதீர யான் மிசைதொறும் மிசைதொறும் மிக்க பசிநீங்க யான் உண்ணுந்தொறும் உண்ணுந்தொறும், இடும்பைஇன்றி இடைஇடை இடுபு - துன்ப மென்ப தில்லாமல் இடை இடையிடையே அவர்கள் பின்னும் இடுதலால் பாழ் வயிறு என்றும் நிரம்பப் பெய்தலின் - முன்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/302&oldid=1587046" இலிருந்து மீள்விக்கப்பட்டது