உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் 20

-

பாழாய்க்கிடந்த என் வயிறு நிறையும்படி யான் அதன்கண் அவற்றை இடுதலாலே, பெரும் பொருள் எய்திய வறிஞனின் அல்லாந்து இருந்தபின் மிக்க செல்வத்தை அடைந்த வறியவனைப்போல் மகிழ்ந்திருந்தபின், என்னைப் பொருந்தக் கூஉய் ஏனையோர் இடத்தில் தான் எனைச் செலுவ - என்னை மனம் பொருந்த அழைத்து மற்றோரிடத்தில் அவ் வேவலாளன் என்னைச் செலுத்த;

‘குமரி’ யென்பது

'ஈனாதவாழை

42)

ளமைப்பொருட்டு, இதனை என்பர் சிலப்பதிகார (16, அரும்பதவுரையாசிரியர்; “குமரி வாழையின் குருத்தகம் விரித்து” என்பது சிலப்பதிகாரச் சொற்றொடர்.

‘சுமைத்தயிர்’ ஏட்டுத் தயிரெனவும், ஏடு ஆடைபோல் மேல் மூடியிருத்தலின், ஆடைத்தயிர் எனவும் வழங்கும்; இவ்வுண்மை “தீம் பாற் சுமைத் தயிரும்" (கோவிந்தையார், 73) என்னுஞ் சிந்தாமணியானும் அதன் உரையானுந் தெளியப்படும்.

தேங்கனிபழம்' என்புழிக் ‘கனிபழம்' வினைத்தொகை. ‘வெறிகமழ்கனி' யென முன் வந்திருத்தலின் அதனை முப்பழம் 6 எனவும், 'தேங்கனிபழம்' என்னும்

தனை ஏனைப் பழவகைகளெனவும் உரைத்துக்கொள்க. 'பிறவும்' என்றது, வடைபாயசம் முதலிய தின்பண்ட வகைகள்.

‘இயற்றி’ படைத்தென்னும் பொருடு; இலையில் இடம் அரிதாம்படி கறிவகைகள் நெருங்க வைக்கப்படுதலின், 'துன்ன வியற்றி' யெனப்பட்டது; அவ்வளவு ஏராளமான கறிவகைகள்

என்பது கருத்து. அடுத்தடுதது இடுதலாலுண்டாந்

துன்பங்களைச் சிறிதும் பாராமல் அவ்வேவலாளர் அன்புடன் இடுதலின், 'இடும்பையின்றி இடையிடை இடுபு' என்றார். 'இடுபு' வினையெச்சம்; செய்புவென்னும் வாய்பாடு.

நெடுநாட் பட்டினியா யிருந்தமையின் 'ஒன்றுமில்லா வயிறு' என்பது தோன்றப் 'பாழ்வயிறு' எனப்பட்டது; பாழ், ஒன்று மின்மை.

அல்லாந்து - மகிழ்ந்த; இப்பொருட்டாதல் “அதனெதிர், சொல்லேமாதலின் அல்லாந்துகலங்கி என்புழிக்காண்க (குறிஞ்சிப்பாட்டு,143).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/303&oldid=1587047" இலிருந்து மீள்விக்கப்பட்டது