உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

279

சலுவல் செலுத்தல்; "மேற்கொண்டவை செலீஇ என்னும் புறப்பொருள் வெண்பாமாலையிற் போல (12,13)ப் பிறவினைப் பொருட்டாய்நின்றது.

(174-185) ஆங்கு - அவ்விடத்தில், பொழிநீறு இ

பொழிகின்ற திருநீற்றை இ இட்டு,

-

டு-அருள்

விழிமணி தாங்கி

சிவபிரானுடைய கண்கள் எனப்படுஞ் சிவமணிகள் அணிந்து, காந்தள்போலச் சேந்தொளிர் அங்கையில் சிவஞானபோதம் நவையறச் சிவணி - செங்காந்தள் மலர்கள்போலச் சிவந்து விளங்குகின்ற அழகிய கையிற் 'சிவஞானபோதம்' என்னும் மெய்கண்டநூலைக் கற்பாரது குற்றம் நீங்கும்படி ஏந்தி, பழுதுஅறு மாணவர் குழுவொடு சூழ குற்றமற்ற மாணாக்கர்கள் ஏனைத் தகுதியுள்ள அன்பர் கூட்டத்துடன் சூழ்ந்திருக்க, வான்கதிர் மண்டிலம் ஈங்கு வந்ததுபோல் திருவொடு விளங்கும் உருகு பொன் தவிசில் - வானத்தின்கண் உள்ள ஒளிமண்டிலமே இங்கு இறங்கிவந்தாற் போல மேன்மையுடன் விளங்குகின்ற உருகாநின்ற பொன்னின் ஒளிவாய்ந்த இருக்கையில், கல்மனம் உருக்கும் காண்தகு கோலமொடு - கல்லொத்த வன்னெஞ்சையும் -ருக்குகின்ற காண்டற்குத்தக்க திருக்கோலத்துடன், என்மனம் உருக்கி எழுந்தினிதருளிய - ஏழையேனது உள்ளத்தையும் உருக்கி இனிதெழுந் தருளிய, சோமசுந்தர குரவனைக் காணூஉ சோமசுந்தர தேசிகனைக் கண்டு, செய்குவது அறியேன் மெய்தடு மாறி நிலம்படவீழ்ந்து கலங்கிநிற்ப - செய்வது தெரியேனாய் உடம்பு விதிர்த்து நிலத்திற் பொருந்த விழுந்து வணங்கி அஞ்சி நிற்ப;

‘பொழிநீறு' அருள்பொழியுந்திருநீறு; விழிமணி, விழியாகிய மணி, ஆவது ‘அக்கமணி’ யென்பது. 'சேர்ந்து’, சிவந்து; இதற்குச் செம்மை, முதனிலை.

‘நவையற’ வென்றது, 'குற்றம்நீங்க' என்னும் பொருட்டு; குற்றமாவது மலம் மாயை வினை யென்னும் மூன்றன் சேர்க்கை யாலுயிர் கண் மாட்டு உண்டாவது; 'நவை' குற்றமென்னும் பொருட்டாதல், “அருநவை ஆற்றுதல்இன்று” என்னும் நாலடி யாரிற் (295) காண்க.

'சிவஞானபோதம்' என்பது ‘சுத்தாத்துவித சைவ சித்தாந்தம்’ நிறுவும் மெய்கண்டநூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/304&oldid=1587048" இலிருந்து மீள்விக்கப்பட்டது