உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

ஓம்

திருச்சிற்றம்பலம்

திருவொற்றிமுருகர்

மும்மணிக் கோவை

காப்பு

நீர்வளநன் றோங்குந் திருவொற்றி நீணகரிற் சூர்வளந்தின் வேலோற்குத் தூயநூல் - சீர்வளர எம்மா லியற்றுவதொன் றுண்டா லதுவாகுங் கைம்மா முகத்தன் கழல்.

நூல்

1. நெஞ்சொடுகிளத்தல்

நீர்வளங் கவின்ற சீர்வளர் பழனத்து நெற்குரல் கௌவிய நற்குரற் பைங்கிளி கானற் காவிற் றான்விரைந் தெய்திப் பொன்வீ ஞாழற் பொலிந்தினி திருப்பவுங்,

5 கருங்கழி வாரிய பெருமீன் குவைஇ வன்றிறற் பரதவர் முன்றிறொறு முணக்குந் துடிக்கட் டுணியல் கொடிக்குலங் கவர்ந்து மருதங் காவிற் பெரிது வைகவுங், குளனுறை வாழ்க்கை வளநீர்க் கோழி

10 மனையுறை நீங்கித் துணைகூப் பெயர்ந்து கால்வழி யோடிக் கழியிற் சேரவும்,

புலவுமண முனைஇய நிலவுறழ் குருகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/34&oldid=1586758" இலிருந்து மீள்விக்கப்பட்டது