உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

  • மறைமலையம் - 20

கண்ணகன் விசும்பில் நண்ணிய முகின்மேல் இவர்ந்தெழு திங்கள் போலப் பரந்துகெழு

துணிநீர்த் தடத்தின் மணமலர் ஆரும் இரும்புதிரித் தன்ன அறன்மருப் பெருமை கரும்புற மருங்கி னொருங்கி நிற்பவும், பொறிகெழு வாளை வெறிபடப் பாய்ந்து முடைக்கழிச் சுறவொடு கறுவொடு மறியவுங்,

20 காலெதிர்ந் தோடுங் கழிக்கயன் மருதச் சேலொடுங் கூடிச் சேர்ந்து துள்ளவும், முழுநெறி யவிழ்க்குங் கொழுங்கால் ஓடிப் பொன்னந் தாமரைப் பொலந்துகள் வாரிக் கோழி முட்டை போழ்படுத் தாங்கு

25

30.

வெள்ளயிர்க் கானற் கொள்ளையின் வீசவும், வெள்ளிவெண் டோட்டுத் தாழையினளைஇக் கையரிக் கொண்ட கடற்கா லோடி நீறுமெய் பூத்த நேரியோன் போலச் செந்தா மரைகள் சிறந்தினிது விளங்க வெண்பொடி வீசிப் பண்பொடு முலாவவுந், தேமொழிச் செவ்வாய்த் திருமுக வுழத்தியர் காமரு கொழுஞ்சுவை வாழையின் பழனும் புன்செய் பயந்த பன்னிறப் பயறும் நன்செய் பயந்த பொன்னிற மணியும்

35 வட்டிகைப் பெய்து கட்டிய சுமட்டின்

எடுத்துச் சென்றங் கடுத்துயர் பாக்கத்துக் குமிழிடை யுகளும் அமைவிழிப் பரத்தியர் பகுத்துணர் வின்றி மிகுத்துக் கொடுத்த தரளமும் மீனும் நிரல்பட அளந்துகொண்

40 டுவப்பொடு பெயர்ந்துதம் மிருக்கை சேரவும், மருதமும் நெய்தலும் மயங்கிய மரபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/35&oldid=1586760" இலிருந்து மீள்விக்கப்பட்டது