உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை உலக மெல்லாம் ஒருங்குவந் துறினுந் தொலையா வளத்தொடு நிலவுறு வைப்பின் ஒற்றி மாநகர்க் குற்றகண் ணெனவும்,

அக்கணி னுள்வள ரருமணி யெனவும், அம்மணி யுள்ளுறை பாவையை யெனவும் பாவையினகத்துப் பண்புபல காட்டி மேவி யாங்கது புடைபெயர்ந் தியங்கத் தக்க வாறு மிக்கது புரியும்

50 ஓரியல் பில்லா ஆருயிரெனவும், இருவே றுலகினும் இரண்டற விரவி அறிவுந் தொழிலும் நெறியுற விளக்கும் மாதொரு கூறற் கோதிய முதல்வன், செல்லலுற் றழுங்கிய மல்லற் றேவர்

55

குழாம்பெரி துய்ய வழாவே லோச்சிப் பாடில் சூருக்கு வீடு நல்கி

வேந்தன் பயந்த கூந்தற் குமரியை மணந்துல களித்த நிணந்திகழ் வேலன், ஐயன் செய்யன் பன்னிரு கையன்,

60 வறியே மிடும்பை பொறிபடுத் தெதிரும் பெரியோன் பெரிய ரறிவினுக் கரியன்

65

றிருவுரு வொருமையினெழுவித் தருமையொடு வழிபா டியற்றி விழிநீ ருறைப்ப

அன்புரு வாகி யின்புற லறியாது

புன்பொருள் கவருமென் மின்புரை மனனே!

வரம்பறு மாற்றல் நிரம்பிய முருகன் றானெழுந் தருளும் வான்குடி லாக நின்னைத் தந்தன னாகப், பின்னை மண்டிரி வாகக் கண்டன சிலவும்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/36&oldid=1586762" இலிருந்து மீள்விக்கப்பட்டது