உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

70

மறைமலையம் - 20

புனறிரி வாகப் புகுவன சிலவும்

அனறிரி வாக அடைவன சிலவும்

வளியிட னாகத் தெளிவன சிலவும் விசும்பிடனாக உசும்புன சிலவும்

ஓவா திருப்ப மேவுநை, யதனாற்

75

றுன்பமுங் கவலையும் நின்புற னாக

இன்புற லறியா திடர்ப்படு குனையே, யதாஅன் றுறுதுணை யாகச் செறியு மென்னையும் புற்சாய்த் தோடும் புனலே போல நின்வழிப் படீஇ யென்னுயிர்க் குயிராம்

80 அறுமுகத் தையனை மருவலொட் டாது வன்மை செய்தநின் புன்மையோ பெரிதே யினிநீ யிங்ஙன மொழியாது, பனிமலர்க் கடம்பு சூடிய தடந்தோண் முருகன்

றிருவுருப் பொதியு மொருகல னாக

85

விழுமிதின் நீடு வாழ்மதி கொழுவிய

நலங்கெழு நறும்பால் பெய்த

பொலங்கலம் பொலியும் பெற்றியா லெனவே.

(1)

2.அருளியல்புரைத்தல்

பெற்றி யரிய பெருமான் பெரியதிரு

வொற்றி நகர்வந்த வொள்வேலான் - நற்றவருங்

காணா அரிய கழலா னெனதுளத்து

நாணா தமர்ந்தவா நன்று.

3. காமமிக்க கழிபடர்கிளவி

நன்றன் றுனக்குத் திருவொற்றி வேலரை நாடியிடர் இன்றிங்கு நீகொள்ள லென்றுரை யீரக லீர்ங்கழிகாண்! மின்றங்கு நொய்சிறை வண்டினங் காளினி மேலெமக்கு

நின்றிங்கு நீர்செய்யு நன்மையென் னோவொன்று நேர்வதின்றே.

(2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/37&oldid=1586765" இலிருந்து மீள்விக்கப்பட்டது