உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

10

15

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை 4.தோழி விரவிக்கூறல்

நேரிறை முன்கை வாரொலிக் கூந்த லரிகடை யொழுகிய பெருமதர் மழைக்கண் இலவுறழ் செவ்வாய் நிலவுறழ் திருநுதற் கொடிபுரை மருங்குற் கடிதிகழ் மேனிக்

கரும்பினு மினியவென் னரும்பெறற் பாவாய்! வழிவழிச் சிறக்குமெங் கழிபெருங் குலத்திற் பாற்கடற் றோன்றிய சீர்த்திரு வனையாய்! வலம்புரி யன்னவெங் குலம்புரி கோமகள் அரிதி னீன்ற பெருமுத் தனையாய்!

மிடியறி யாவெங் குடியெனு முற்றத் தன்புநீர் பாய்த்தி யின்புறக் கைசெய் தாயமு மியானுஞ் சீரிதின் வளர்க்கும் நற்பயன் கனிந்த பொற்சுடர்க் கொடியே! நக்கும் புக்கும் மிக்கமகிழ் செய்யுஞ்

செயிரற வெழுதிய வுயிரோ வியமே! அருமையின் மிகுந்தவெம் பெருமுதற் றந்தை யாற்றா விருப்பொடு மேற்றிப் பார்க்கும் விளிவற விளங்கிய வொளிமணி விளக்கே! நின்னரு ணாடித் துன்னி நின்றிங்

20 கடியேன் கூறு மொடியாச் சிறுமொழி

வறிதென வொழியா தறிவுகொளல் வேண்டும்,

வயலுழவர் குவளைகட்டு

வியல்வரம்பிற் றடிந்திட்ட

கயலினிடைப் படவெறிய

25

மருதமகள் கருவிழிபோற்

பொருவின்றித் திருவிளங்கச்,

செந்நெல் வித்திய பொன்னுறழ் வான்முளை

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/38&oldid=1586767" இலிருந்து மீள்விக்கப்பட்டது