உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

  • மறைமலையம் - 20

220 ஒருவ! சிறுவ! கருமயின் முருக! மறைமுடி தன்னில் நிறைதிரு வுருவினை! கண்ணும் உணர்வுங் கதுவாப் பெற்றியை! ஐம்பெரும் பூதமும் ஆகி நின்றனை! உலகுநின் னுருவே, ஒளிகணின் வழியே, 225 அலகிலாச் சமயத் தவ்வவர் தமக்குப் பலவே றுருவின் நிலவுநை நீயே! ஆறுநின் முகமே, ஐந்துநின் வடிவே, நான்குநின் மொழியே, மூன்றுநின் கண்ணே, இரண்டுநின் றுணையே,ஒன்று நின் வேலே, 230 மருண்ட உணர்வொடு மாட்சிமை எய்தா முருட னேற்குந் திருவருள் தருநையென் றியானறி யளவையின் ஏத்தத் தான்உவந்து குறிப்பரு மின்பத்துப் பிறக்கினன் எனையே, அதுமுதல் இன்பம் ஆர்ந்தங் கிருத்தல் அல்லது

235 துன்ப மென்ப தறியேன், அன்பொடு நீயும் அவன்வயிற் செலினே பாயருள் ஒருவந்தந் தருகுவன் மன்ற; மருவந்து தலைப்பெயன் மாரியின் மலைப்படு நீத்தம்

பைந்நிறப் பீலியுஞ் செந்நிறத் துகிரும்

240 வேழ மருப்புங் காழகிற் றுணியும் ஒருங்கு வரன்றி மருங்கு விரைஇக் குண்டுகட் படுகரின் மண்டி நிறைந்தாங்கு, அவலக் கவலையும் உவலைச் சுவையும் முரணுறு அறிவுந் திருகிய செருக்கும்

245 முதலறப் பெயர்த்துச் சிதையா தோடி அன்பின் நிறைந்த இன்ப வெள்ளத்துப் பழியாக் கடும்பொடும் விழுமிதிற் றுவன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/83&oldid=1586822" இலிருந்து மீள்விக்கப்பட்டது