உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மலர்க்கையென் புன்றலைச் சேர்த்திப் புலப்பட நீயே, உடம்புங் பொறியுங் கடம்படு கருவியும் அறிவும் வளியும் அல்லை; அறிவாய்ச்

195 செறியும் பெற்றியை; மற்றவை அறியாப் பண்பின; அனையை ஆயினும், முன்பே படலம் மூடிய கண்ணின் மிடைபடு மாசு பொதிந்த நீர்மையை; வீசிய ஒளிப்பிழம் பாகி வெளிப்படும் முருகன்

200 ஆனாது சுரந்த அருளினன் ஆகலின், நின்னை மறைத்த துன்னிரு டுரந்து தன்னருட் பொலிவான் நின்னறிவு கொளீஇ அருகா இன்பந் தருதற் பொருட்டு

மெய்ந்நிலை இருத்தி மாசு போக்கித்

205 தன்னிலை நினக்குத் தந்தனன் கோடியென் றுறுதி கூறி விடுப்பத், தேறிப் பன்னிரு கையன் முன்னர் எய்தி இமயம் பூத்த பனிகெழு சுனையில்

அமையா தாடிய உமைதரு புதல்வோய்!

210 எரிவிழித் திமைக்குந் திருநுதற் றந்தைக் கொருமொழி விரித்த தெருளுறும் உணர்வோய்! வானோர் உறுகண் தீர்ப்ப மேலோர்

ஐவடி வேலைக் கையினில் எடுத்தோய்! வேந்தன் தந்த ஏந்தெழிற் செல்விக்கு

215 வரைபுரை மார்பம் வரையாது அளித்தோய்! குன்றவர் வளர்த்த பொன்றிகழ் வள்ளிக்குக்

கொழுகொம் பாகிய விழுமிய தோளோய்! அருந்தமிழ்க் கீரனைப் பொருந்திக் காத்தோய்!

எம்மனோர்க் கெளிவந்த செம்மை யாள!

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/82&oldid=1586821" இலிருந்து மீள்விக்கப்பட்டது