உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் - 20

மணித்தவி சிட்டதன் மிசையெனை இரீஇக், குமரி வாழையின் குருத்தகம் விரீஇ

165 அறுசுவைக் கறியும் அடிசிலுந் துவையும் வெறிகமழ் கனியும் நறுநெயும் பாலுந்

தீஞ்சுமைத் தயிருந் தேங்கனி பழனுங் கன்னலும் பிறவுந் துன்ன இயற்றிக், கடும்பசி தீரயான் மிசைகொறும் மிசைதொறும்

170 இடும்பை இன்றி இடையிடை இடுபு பாழ்வயிறென்றும் நிரம்பப் பெய்தலிற் பெரும்பொருள் எய்திய வறிஞனின் அல்லாந் திருந்தபின் என்னைப் பொருந்தக் கூஉய் ஏனையோர் இடத்திற் றானெனைச் செலுவ, ஆங்குப்

175 பொழிநீ றிட்டு விழிமணி தாங்கிக்

காந்தள் போலச் சேந்தொளிர் அங்கையிற் சிவஞான போதம் நலையறச் சிவணிப் பழுதறு மாணவர் குழுவொடு சூழ, வான்கதிர் மண்டிலம் ஈங்கு வந்ததுபோல்

180 திருவொடு விளங்கும் உருகுபொற் றவிசிற் கன்மனம் உருக்குங் காண்டகு கோலமொடும் என்மனம் உருக்கி எழுந்தினி தருளிய சோம சுந்தர குருவனைக் காணூஉச், செய்குவ தறியேன் மெய்தடு மாறி

185 நிலம்பட வீழ்ந்து கலங்கி நிற்ப,

யாரையோ? எங்கள் அறுமுகத் தையன் தந்ததோர் அருளின் வந்தனை போலும்! நல்லை! நல்லை! எல்லையில் காலம்

அழியாப் பேற்றின் நிலையினை! விழுமியை!

190 செவ்வியை! பெரியை! ஒளவியம் இலையென் றினியன பலவும் பனிவரக் கிளந்துதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/81&oldid=1586820" இலிருந்து மீள்விக்கப்பட்டது