உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை 135 அருணிலை உணரேன் றெருளின்றி யோடிக் குடந்தங் கொண்டெதிர் நின்றனெ னாக, மடத்தபு சின்மொழி மகிழக் கூறி அன்புறு புலவோய்! அஞ்சல் ஓம்புமதி! காலங் கடந்த கோல வைப்பில்

140 நிகரா இன்பம் மிகைபடை நுகர்ந்து

கடைவழி இல்லா நிலையொடு பொலிகுவை! என்றுபல நல்லுரை பின்றையுங் கூறித், தன்மருங் கிருந்தோற் குறிப்ப, அவனுமென் அங்கை பற்றிச் சென்று கொங்குகமழ்

145 நீராடு துறையில் நிறுவிய அளவை, கார்மின் அனைய ஏர்கெழு மகளிர் குறுநகை மிளிரஎன் அருகிற் போந்து, மாசு பொதிந்து பாசி ஆகி

ஈரும் பேனுந் தீரா துறையுமென்

150 புன்றலைக் குஞ்சி புணர்ப்பற உளரிப் புழுகுநெய் உரைத்துப் பனிநீ ராட்டி ஈரம் புலர இன்புகை யூட்டித் தாமெனை விடுத்துப் போக, ஏனோன் பிறிதோர் நல்லிடம் புகுத்த ஆண்டைக்

155 கவின்கெழு சிலதர் விரையினர் புகுந்து

விண்ணோர் வேந்தன் கல்ணெனப் பொலிந்தஎன்

றுன்னற் சிதாஅர் நீக்கி முன்னிய

அரவுரி அன்ன ஆடை உடீஇக்,

கலவைச் சாந்தம் புலர அட்டி,

160 முகைநெகிழ்ந்து விரிந்த தகைசால் நன்மலர் பிணைய லாக்கி மணமுற மிலைச்சித்,

துளங்கொளிக் கலன்கள் விளங்க அணிந்து,

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/80&oldid=1586819" இலிருந்து மீள்விக்கப்பட்டது