உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

110

115

மறைமலையம் - 20

அகினெய் பெய்து பலர்நின்று புகைப்ப, வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த நறுங்குற டுரைத்து

விழுமிய திரட்டிய செழுநறுங் குழம்பில் ஐவகை விரையும் விராஅய் ஒய்யெனத் துருத்திப் பெய்து செறிப்பப் பலர்நின்று தலைப்பெயன் மாரியின் மலைச்சாந் துறைப்ப, வாழையுங் கமுகும் வயின்வயின் நாட்டி

ஓவிய நுட்பமும் ஒண்பணி நுட்பமும் மேவிய படாஅம் மேலுறக் கட்டிக் கழங்குபுரை நித்திலம் இலங்கத் தூக்கிக் கேழ்கிளர் பன்மணி காழ்பட நாற்றிப் ‘பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை' 120 பால்வேறு மரபிற் பலபட இயற்றி எலிமயிர்க் கம்பலம் நிலனுற விரித்து விரியிடை எழுப்பிய அரியணை மீது, வெங்கதிர் ஞாயிறு மணிநெடுங் கோட்டில் தங்கி இருந்த தகைமை போலவும்

125

வான்கதிர் மதியம் மீன்குழாஞ் சூழத் தான்பொலிந் தெழுந்த தலைமை போலவும் அறுமுகத் தொருவன் குறுநகை இலங்க நசைகெழு விழிகள் திசைமுகம் பரப்பிக் குன்றாத் திருவொடும் விளங்கக், கண்டுநனி

130 மெய்ந்நிலைத் தொண்டர் தந்நிலை யறியார் விழிநீர் சிந்த மொழியிடை குழற

உச்சிக் கூப்பிய கையினர் பழிச்சி

அருட்குறிப் புணர்ந்தாங் கமைவொடு நிற்ப,

வெருவரு நோக்கமொடு மரம்போ லாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/79&oldid=1586818" இலிருந்து மீள்விக்கப்பட்டது