உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

85

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை வேறுசில சிறுமியர் சாறுகெழு கரும்பின் மீன்சினை அன்ன வெண்மணல் குவைஇத்

தேம்பொதி மழலையொடு சிறுபாட்டிசைத்து வயின்வயின் நின்று மகிழ்வொடு குறுவவும் அழகுசால் நெய்தல் நலமுற மருவிய ஒற்றிமா நகரிற் பொற்றொழிற் பொலிந்து விண்டொட நிவந்த இஞ்சி வளைஇய

உருகெழு திருநகர் காண்டொறும் பரசி மலைகுயின் றன்ன நிலையுயர் தலைக்கடை அஞ்சுவரு நோக்கமொடு நின்றனென் ஆகச், சுருளிருங் குஞ்சி பொன்ஞாண் பிணித்து நிலன்றொட வீழ்ந்த பொலந்துகில் அசைஇச்

90 சாந்துபுலர் மார்பிற் பூந்தொடை புரள ஏறுசெல் செலவின் வீறுபடப் போந்து யாரையோ புலவோய்! அறுமுகத் தையன்

புகுத்துக நின்னையென்று அருளினன், போதி! யென்று இன்னுரை ஒருவன் பகர, அதனெதிர்

95 சொல்லுவது அறியேன் மெல்லெனப் புக்குப் பொன்புனை விளக்கந் தங்கையில் ஏந்தி

மின்புனை மகளிர் நிரல்பட நிற்பக், கைவல் பாடினி கறையறப் பெற்ற பயனுடை எழாஅல் நலனுற மரீஇ

100 விரல்நுதி தெறித்த நரப்பிசை நோக்கி மிடற்றொலி பொருத்தி நெறிப்பட மிழற்ற, உருமதிர்ந் தன்ன மண்கனை முழவமும் வரைவேய் துருவிய உரைகெழு குழலும் பேணுறு மரபிற் பாணியும் வல்லோர்

105 பால்கெழு மரபிற் சீரிதின் இயக்கச், செந்நெருப் பார்ந்த பொன்னுரைத் தடவில்

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/78&oldid=1586817" இலிருந்து மீள்விக்கப்பட்டது