உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

50

மறைமலையம் - 20

சிதையாப் பேற்றின் அதிகனும் இலனே!

குறுநடைப் புறவின் றபுதிகண் டஞ்சிக் குருதிகெழு பைந்தடி முறைமுறை தடிந்து கன்னம்புக் கேறிய மன்னனும் இலனே! அருந்தமிழ்ப் புலவோர் பெருந்திறம் உணர்ந்து 55 பொன்னும் மணியுந் தண்ணடை நிலனும் வரையாது வழங்கிய அரசரும் இலரே! மெய்யொடு மிடையாப் பொய்பொருள் ஈட்டித் தாமறி அளவையிற் பிறர்க்கொன் றீயாது தாமே நுகருந் தீயரோ உளரே!

60

தமிழ்வழக் கறியா தமைவில கூறுங் கற்றறி வில்லார் மற்றினிப் பலரே! அதனான் மற்றவர் கடைதொறும் நித்தலும் படர்ந்து வாய்வா ளாது வல்லாங்குப் பாடிக்

கொன்னே திரிதல் இன்னாது மன்னோ!

65 கொழுநனை அரும்பிய காஞ்சியங் கோட்டிற் புன்றலைச் சிறுவர் ஏறித் துன்றுகடற்

சுரிதிரைப் பாய்ந்து விளையாட் டயரவும், வெண்டோடு விரிந்த கைதையந் தாது மெய்படத் திமிர்ந்த நொய்சிறை வண்டினம்

70 விலையறு முத்தமொடு தலைமயக் குற்றுக் கண்மயக் கேறி எண்ணில கிடப்ப நுளைச்சிறு மகளிர் வளைக்கையின் வாரிக் குடம்புரை பணிலம் நிரம்பப் பெய்து ஆமை யடுப்பில் ஆம்பல் நெருப்பிற்

75 றாமறி திறத்தால் அடுவுழி மயக்கற்றுத் துண்ணெனப் பறந்து விண்ணிடைச் செல்ல வியப்பிடை எழுந்த மயக்கொடு நிற்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/77&oldid=1586816" இலிருந்து மீள்விக்கப்பட்டது