உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை கொளவுரை நிகழ்த்தும் வளமுறும் உணர்வோய்! பொருளியல் அறிந்து மருளறப் புனைந்து கேட்போர்ப் பிணிக்குங் காட்சிசால் உரவோய்! 25 பண்டைப் பிறவியிற் றண்டா தாற்றும் பெருந்தவ முடையை மன்னே! பொருந்தியின் றீங்கெனைத் தலைப்பட் டனையே; ஓங்கி ஊழி செல்லினும் நீடு வாழ்மதி! கீழ்த்திசை எழீஇ மேற்றிசைப் படருந்

30

தீத்தெறு ஞாயிறு வடதிசைப் புணர்ந்து தென்றிசை நோக்கித் திசைதடு மாறினும், வானக் கடலின் மீனென வயங்கும் உடுநிரை உதிர்ந்து கொடுமை யாயினும், உலவா வாழ்க்கையின் நிலைமதி சிறந்தே!

35 வறுமை களைந்து சிறுமை நீங்கி

நன்னிலை பலவும் இன்னே பெறுதி! வரம்பறும் இன்பம் நிரம்பக் கோடி! நின்னுயிர்க் குறுதி நாடித் துன்னிநின்று நிரைநிரை கூறுமென் உரைபிழை யலையே!

40 இன்னுங் கேட்டல் வேண்டின் முன்னுமென் சொல்லள வமைந்து நலம்பல எய்தினர் பல்லோர் பல்லோர் பண்டும் உண்டால்; இனியொன்று கூறுவென் கேண்மதி! பனிகெழு முல்லையங் கொடிக்கு மல்லஞ் செழுந்தேர்

45 அருள்வர ஈத்த பெரியனோ இலனே!

விழியாக் கண்ண செழுமயிர்த் தோகைக்கு நறும்படாம் வீசிய உறுவனும் இலனே! பவனமா உலகின் நவையறப் பெற்ற அமிழ்துபொதி நெல்லி ஔவைக் கீத்த

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/76&oldid=1586815" இலிருந்து மீள்விக்கப்பட்டது