உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

-20

மறைமலையம் – 20

27. நெஞ்சறிவுறுத்தல்

நமரா யிருந்துபின் ஏதில ராவர் நயமிலருந்

தமராவ ரென்னிற் றமர்பிற ரென்று தகவுசொல்லி

அமராடி நிற்றல் வறிதுகண் டாயலை யாழியொற்றிக்

குமராவென் றோதிக் குடந்தங்கொண் டேத்தக் குறிக்கொணெஞ்சே

5

10

28. புலவராற்றுப்படை

நெஞ்சுநெக் குடைந்து பஞ்சுகண் அடையா உடும்புரித் தன்ன கடும்பசி மருங்குற் பழுப்புடை தோன்றிச் செழிப்பின்றி வைக வறுமை யுழந்த உறுமனைக் கிழத்தியொடு

நாளும் நாளும் வாளாது கலாய்த்து நோனாப் பசியின் ஆனா தழூஉம்

புன்றலைக் குழவி தன்றிறம் நோக்கிக் கனவுகாண் பொழுதும் நனவெனத் தோன்றும்

அருந்துய ரென்றும் பெருந்துய ருறுப்ப

மிடிகெழு வாழ்க்கையிற் குடியா யிருந்து

மழுங்கிய வுள்ளத் தொடுங்கிய புலவோய்! இயற்றமிழ் வரம்பு திறப்பட வாய்ந்து

புலங்கொள நிரம்பிய நலங்கிளர் அறிவோய்! வழுவொன் றில்லா விழுமிய ஒழுக்கம்

15 உயிரினும் ஓம்புஞ் செயிரறு பெரியோய்! கொழுந்தமிழ் போலக் குளிர்மாண் குணத்தோய்! உழுந்துருள் அளவையிற் செழுந்தமிழ்ப் பாக்கள் நூறுநூ றியற்றுங் கூறுபடு மதியோய்!

ஒளிச்செல வதனினும் வளிச்செல வதனினும்

20 நெறிப்படக் கிளக்கும் மிறைக்கவி வல்லோய்! அளவைநூன் மரபிற் பிறழா தியாண்டுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/75&oldid=1586814" இலிருந்து மீள்விக்கப்பட்டது