உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

145 என்னுளம் மன்னிய துன்னிருள் நீங்க

முற்படக் கொளுவிய பொற்சுடர்க் கொழுந்தைப், புலங்கொளக் காணும் பொறியும் இலையால்! ஆவண ஒலியும் அருங்கட லொலியும் ஒன்றுதலை மயங்கி என்றும் ஓவா

150 ஒற்றிமா நகரிற் றற்றகப் பொலிந்த பசியதோர் மஞ்ஞை மிசையமர் செவ்வேள், தேவரும் மயங்கு மூவா மாயம்

பலமுறை இயற்றிய தலைமைதீர் சூரின் பேருரம் வசிந்த கூர்வடி வேலன்

155 நோனா வுள்ளத்து நான்முகன் றெளியத் தலையிற் குட்டிய நலனுறு குமரன்,

விண்ணவர்க் கரியன், எம்மனோர்க் கெளியன், பிறைமுடி புதல்வன், மறைமுடி முதல்வன், உமைதரு சிறுவன், எமையளி யுறுவன்,

160 பன்னிரு கையன், என்னுயிர்க் கையன், திருவடி நினையா அறிவிலர் போல என்னெதிர் தோன்றிப் பன்முறை கழறினை! ஈங்கிது விடுத்துமற் றாங்குச் சென்று துடியிடை ஒருகை ஊன்றி வடிவிழி

165 திசைமுகம் பரப்பி நசைபடப் பார்க்கும் இருங்கண் மான்பிணை காணின்

நெருங்கி நின்றிங் குரையலை யினியே.

26. பிரிவாற்றாத தலைவி தோழியொடு கூறல்

இனியா ரெனக்கிங் கினியா ரியைந்தார்

முனியார் முனிந்து மொழியார் - பனிமொழியாய்

புள்ளொன் றிவர்ந்து புகழொற்றித் தந்நகர்க்கு

நள்ளிருட்கட் சென்றார் நமர்.

49

(25)

(26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/74&oldid=1586813" இலிருந்து மீள்விக்கப்பட்டது