உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் - 20

வண்டுந் தேனும் வரிக் கடைப் பிரசமும் இம்மென முரன்றுநன்மலர் தோறும், அளிநற மாந்திக் களிகூ ரும்மே,

120 பூவாக் கண்ண தோகை விரித்து முளையிள ஞாயிற் றிளவெயிலெறிப்பப் பீடுறு மஞ்ஞை யாடுறு மன்றே,

இன்னுங் கூறல் வேண்டிற் பின்னுமென்

சொல்லள வமையா மல்லலம் பொதும்பர்ப்

125 பல்பெருஞ் சிறப்புங் கண்டிலை மன்னோ! அன்றியாங் கனிச்சமேற் படினுந் தனித்துயர் உழக்குந்

ச்

தழைமலர்ச் சீறடி குழைபட நடந்து

பொழிலிடம் புகுந்து பூந்தட மருங்கின்

விழைதக நின்ற பழுதில் பாவையை,

130 என்னுளம் என்னுந் தன்னமர் கிழியில் வழுவின் றெழுதிய எழிலோ வியத்தை, யமிழ்துபொதி துவர்வாய்க் கிளவிசில மிழற்றும் மாநிறங் கொண்ட தூநிறக் கிளியைக், காடுறை வாழ்க்கைத் தன்னினம் பிரிந்து 135 நாடுறை வாழ்க்கை நன்கனம் மருவிய

குடமாண் கொங்கை மடமான் பிணையைக், கிளிச்சிறை யென்னும் பழிப்பறு பசும்பொன் கரைத்தீண் டெழுதிய தரைக்கிளர் வல்லியைக், காமக் கடும்பசி நாமுறக் களையும்

140 பெறுதற் கரிய உறுதுணை மருந்தைக், காண்டல் செல்லா அருவப் பொருளெனப் பூண்டோர் புகழுரை புரைபட்டு ஒழிய மின்னென மிளிர்ந்தென் கண்ணெதிர் பொலிந்த கரும்பினும் இனிக்குமென் னரும்பெற லுயிரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/73&oldid=1586812" இலிருந்து மீள்விக்கப்பட்டது