உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

595

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மீனினம் வளைஇய நாண்மதி போலப் பால்கெழு மரபிற் பரந்து செல்லவுங்,

கொழுங்கயன் மாதர் விழியென மிளிரவுங், கருவெரிந் உடைய பருவரா லுகளவும், முற்றா மஞ்சட் சிறுபுறங் கடுக்கும்

இறவு கரைமருங்கிற் சுரிந்து துள்ளவுஞ், சிறுவளி எடுப்பச் சிறுதிரை யெழீஇ

முறைமுறை யுராஅய்க் கரையினைச் சாரவுஞ், செழுநீர்க் குவளையுங் கழுநீர்ப் போதும்

முழுநெறி ஆம்பலுங் கழியவுங் குழுமிக்

காண்போர்ப் பிணிக்கும் மாண்பின தன்றே; ஆங்குப்

பொதியச் சாந்தந் ததைய அசைஇ

100 அரும்பற விரிந்த நறும்பூ அளைஇ விரையுந் தாதும் நிறைய முகந்து தலைத்தலை வீசி நலத்தக உலாஅந் தென்றலும் என்றும் ஓவாது, அதாஅன்று குன்றிக் கண்ண குயில்கள் எங்குந்

105 துன்றிய மகிழ்வின் நன்றுகூ வும்மே, ஆடுவாற் சிரல்கள் நாடொறுங் கூடி யோடுமீ னருந்தி வீடுறா வன்றே, துகிர்கோத் தன்ன உகிருடைச் சிறுகாற் புறமரப் பொதும்பின் இறைகூ ரும்மே,

110

தூங்கணங் குரீஇப் பாங்குபடத் தெற்றிய அருந்தொழிற் குடம்பையிற் பொருந்து மன்றே, பைஞ்சிறைக் கிள்ளை ஒருகால் தூக்கிப் புன்சிறு கிளையிற் கண்டுயில் கொளுமே, அறுவைமடித் தன்ன பறைகெழு நாரை

115 சிறுகால் தோறும் வருமீன் நோக்கித் தொகுதி யாக மிகுதியொடு வதிமே,

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/72&oldid=1586811" இலிருந்து மீள்விக்கப்பட்டது