உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

60

65

70

75

80

மறைமலையம் - 20

கருமணி புரையும் ஒருகனி நாவலும், உவர்க்கழி மணக்குந் துவர்க்கால் வகுளமும், பொற்றிரள் கடுப்பத் தெற்றென விளங்கும் எழிற்கனி பழுத்த எலுமிச்சம் புதலுங்,

காவதங் கமழ மேவுவ வன்றே; ஒருபாற்

குலிகம் ஊட்டிய தலைமையிற் றிகழ்ந்து நவ்வி நோக்கியர் செவ்வாய் போலக் கொழுங்கனி யுடைய கொவ்வைக் கொடியுங் கற்புடை மகளிர் முற்படச் சூடும்

வரிசையின் மிகுந்த பரிசுடை முல்லையுந்,

தின்பது கல்லாப் புன்றலை மந்தி கறித்துத் துள்ளுங் கறிவளர் கொடியும்,

அணிற்புறங் கடுக்கும் வரியுடைக் கொடுங்காய் கொள்ளையிற் காய்த்த வெள்ளரிக் கொடியுஞ், சொல்லுயர் மரபின் மெல்லிலைக் கொடியுஞ்,

சிறுபளிக் குருண்டை செறிவுறுத் தனைய தீங்கனிக் குலைகள் தூங்க வயின்வயின் நந்தாது வளரும் முந்திரிக் கொடியும் இடையிடை தாஅய் மிடையுமால்; ஒருபால் நடுவிற், பாயொளி மதியம் பரிதி வெம்மையின்

இளகிப் புனலா யிழிந்தது கடுப்பத்

தெளிநீர் வாவியொன் றுளதால்; மற்றது

சிறுகால் தோறும் உறுநீ ரொழுக்கி

வாலுகம் பரந்த கோலிய பாத்தியிற்

பச்சிளம் புல்லை நிச்சலும் வளர்க்கும், அதா அன்

85 றன்னச் சேவ லணிமயிர்ப் பெடையொடும் பொன்னந் தாமரைப் பொலிந்துவீற் றிருப்பவும், நித்திலம் பயந்த நத்து வான்மடுவின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/71&oldid=1586810" இலிருந்து மீள்விக்கப்பட்டது