உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை படுகிளி யோப்பும் விடுகவண் சுழற்றிக் கோல்வளைக் கொடிச்சி மேலிதண் அமர, இருங்கல் வியலறை வரிப்பத் தாஅய

35 நலமுறு வேங்கை பொலம்வீ யுகுப்பத், தேக்கிலை புய்த்த புன்றலைச் சிறாஅர் மீக்கிளர் கோட்டிற் பரிதியிற் றொடுத்த தேத்தடை பிறைக்கோ டுழுதெனக் கீண்டு மாயோன் மார்பிற் செஞ்சேறு கடுப்பப்

40

45

பாஅய் இழியும் படுநறவு முகந்து பசுந்தினைப் பிண்டியொ டசும்புற அளாய் நிரைநிரை வைத்து விரைவொடும் ஆரக், கண்களி கொள்ளும் பன்மலை யடுக்கத்து மரவமுங் குரவமும் பொரிகெழு புன்கும்

எரிகிளர் செயலையும் விரியிணர் மாவும் பராரைச் சாந்தும் பாவை ஞாழலும்

விரிதலை வாழையும் வியன்சினைப் பலவுங் கொன்றையும் புன்னை யுந் துன்றிய நறவமுங் குழைமுகந் தோற்றிக் கொழுநனை யரும்பிப்

45

50

புரியவிழ் மலரிற் சிறுவடுக் கிளர்ந்து

தீவளி யாகித் தீங்கனி தூங்கித்

தண்ணிழல் பயந்து கண்கவர் வனப்பின்

முகில்கண் ணுறங்கத் தலைமையொடு பொலிமே; ஒருபாற்

சுளைநிரை யமைந்த கொழும்பழந் தூக்கிக்

55 குறுமல ரவிழ்ந்த நறுவிரை தெளித்து வீசுகா லசையும் பாசிலை நரந்தமும், நலனுறு மகளி ரிலவிதழ் கதுவிய

முறுவ லன்ன சிறுவிதை பெய்த

பொலன்குட மெடுத்த உலவை மாதுளையுங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/70&oldid=1586809" இலிருந்து மீள்விக்கப்பட்டது