உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் - 20

பாற்கடல் போலத் தூத்தகப் பரந்த நூற்படு கேள்வியுஞ் சீர்ப்படா தொழியச்,

5 சிறுநெறிச் செல்லும் அறியா மாந்தரும் நல்வழிச் செல்லத் தெள்ளிதிற் காட்டும் இழுக்கா நடையும் வழுக்கிப் போக, இந்நிலை நீயுந் திரியிற் பின்னொரு பௌவநீர் வெதும்பின் வளாவுநீ ருண்டோ?

10

15

குன்றுநிலை தவறிப் பந்துபோ லுருளிற் சென்றுவழி யடைக்குங் குன்றியு முண்டோ? கடுங்களிற் றொருத்தல் தொடுமடுத் துண்ணின் முருங்கா தோம்பும் பெருங்கல முண்டோ? என்றுபல கூறி நின்றெனை நெருங்கி

நன்மை நாடிய என்னுயிர் நண்பா! மறியிளங் கன்று முறியுணுந் தாயொடு குழைப்புதல் தோறுங் குழீஇ யுகள, வரையாடு வருடை யிடைவாய் தாண்டி யுள்ளஞ் செருக்கித் துள்ளித் திரிதர,

20 நிலந்தொட்டு வீழ்ந்த குலுங்குமயிர்க் கவரி மென்மெல அசைஇ மேதகச் செல்ல, முளவுமா தொலைச்சிய வன்கட் கானவர் ஞெலிகோற் பொத்திய நெருப்பிற் காய்ச்ச, ஓரி பரந்த தேனிறால் எடுமார்

25

கழைக்கண் குறைத்து நலத்தக இயற்றிய மால்புவைத் திடந்தொறுங் குறவ ரேறத், தினைக்குறு மகளிர் சுவைப்பட மிழற்றுங் கிள்ளை யுறங்கும் வள்ளை யொலிப்ப, மருப்பிடைச் சுற்றிய பொருப்புயர் வேழத்துப்

30 புழைக்கை யேய்ப்ப விழுத்தக முதிர்ந்த தாளொடு வளைந்த குரற்றினைப் புனத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/69&oldid=1586808" இலிருந்து மீள்விக்கப்பட்டது