உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை எய்தினர்க் குறுக்குஞ் செய்தியு முடையன், உருகெழு தோற்றம் மருவுவ னென்று

125 வெருவர லொழிதியா லின்றே, முருகன் குழவிக் கோலத்தும் விழுமிதி னமர்வன்

மடவரன் மகளிர் தடமுலை குழைக்கும்

இளமைக் கோலத்தும் வளமையொடு பொலிவன், அதனான் மின்னெனத் தோன்றிக் கொன்னுற மறைந்தும்

130 – வாதுவன் நடவாக் கலிமா போலத்

தீதுறு நெறியிற் றிறம்படச் சென்றும்

பாகடு களிற்றின் பண்பு போல

உறுதி கொள்ளாச் சிறுமையின் மிகுந்தும்

ஒருவழி நிலையா தோடிப்

135 பலவழிக் கவர்க்குமென் னிலைமையின் மனனே.

23. அருடர வேண்டல்

மன்னு மொருயானை யூட மறுயானை

தன்னுதவி வள்ளி தடமுலைகள் - துன்னுவிப்ப ஒற்றி நகர்வைகும் வேலாய்! ஒருபெரிதோ

பற்றி யெனையாள் பரிசு.

24. தோழி தலைவி குறிப்பறிதல்

பரிசு பிறிதொன் றறியேன் பருமுத்தப் பைம்பணைசூழ் விரிபுக ழொற்றி வருவேலர் போலும் விடைக்களிறொன் றரிதிற் பெயர்ந்திங்கு வந்ததுண் டோவென்ப ரங்குசெல்வர் தெரிவிற் பெரியர் செயலோ சிறியரெஞ் சேயிழையே.

25. கழற்றெதிர்மறை

இழைநெகிழ் பருவரல் எய்திய மகளிரின்

மழைத்தடந் தோள்க ளிளைத்துத் தோன்றப்,

43

(22)

(23)

(24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/68&oldid=1586807" இலிருந்து மீள்விக்கப்பட்டது