உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

95

மறைமலையம் - 20

மறிகய லுகளுந் திருமுக நுளைச்சியர், கொடிச்சி தந்த கடுப்புடை நறவுங் குடத்தி கொணர்ந்த பலப்படு முதிரையும் உழத்தி யெடுத்த விழுத்தகு பழனும் பெறுவிலை யாகச் சிறுமீ னொடுத்தும்,

100 இடையிடை முத்தம் புடைபுடை யளந்துங், கோடு கொண்டு பீடுற மாறியும்,

ஒருசார் பேரொலி நிகழ்த்த, ஒருசார் பனிமலை நிவந்த பண்பு போலச்

சேண்டொட வோங்கிய வுப்புக் குன்றந்

105 தலையழித் துமணர் பொதியுறச் சேர்த்திய ஒழுகை யுருளை முழுமணற் புதைதலிற் பிடர்கொடுத் தெழுப்பிக் கடும்பக டுரப்புந் தாளாண் மாக்கள் தலைப்படும் உஞற்றும், புலவுக்கழி முளைத்த துவரிதழ்த் தாமரை

110 புன்னை நுண்டாது பொறிப்பத் துன்னிய உருவொடு விளங்குந் தோற்றம் எரியிடை யுருகிய பசும்பொன் கவிழ்ப்ப ஓடிய திருவொடும் பொலியுஞ் செவ்வியும் மருவிய நெய்தலங் கானல் ஐதுறக் கிடந்த

115 ஒற்றிமா நகரிற் கற்றைத் தோகை

மயின்மே லிருந்து பயிலுத லானுங், காண்டொறும் இனிக்குங் காட்சியு முடையன் உரைப்பத் தீராச் சிறப்பு முடையன் தம்முயிர்க் கினிய செம்மொழிப் புதல்வரை

120 நோக்க நோக்க மீக்கிளர் காதல்

தந்தையர்க் கெழுதல் போலக் கண்டிடும் விழியள வமையாக் கழிபெருங் காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/67&oldid=1586806" இலிருந்து மீள்விக்கப்பட்டது