உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

தியானைமருப் புழுத சுவடு போலவும் வரையொடு படர்ந்த வல்லி போலவும்

வரிமூன் றொழுகிய திருவி னானும்,

70 மழையும் மரனுங் குழைந்தொருங் கோட விழுமிய பொருள்பல வேண்டிநர்க் குதவுந் தாடொடு தடக்கையிற் றாயுவந் தீத்த வாலிதின் விளங்கும் வேலி னானும்,

பானுரை முகந்த பரிசொடு பொரூஉந்

75 தூவெள் ளறுவை யசைஇ மூவகை மடியுடன் விளங்கி வடிவுடன் சரிந்து நடத்தொறுங் குலுங்கும் வயிற்றி னானும், எழுமிடந் தசைந்துபின் னொழுகுதொறும் மெலிந்து மழைக்கடக் களிற்றின் புழைக்கை யொத்துங்

80

கொழுங்கனி வாழையின் கோழரை யேய்ப்ப ஊறும் ஒளியும் வீறுறத் திகழும் நிறங்கெழு மரபிற் குறங்கி னானும், எப்பாற் பொருளுந் துப்புற வைகும் நிலைக்கள மென்பது பெயரிற் காட்டி

85 முளையிள ஞாயிற்றிற் றளைஞெகிழ்ந்து விரிந்த எரியகை தாமரை போல விரிபுகழ்த் தொண்டர்க ளெதிரிற் கண்டிட மலர்ந்து நிகரில் இன்ப நறைமுறை யொழுக்கிப் பெருமையொடு வைகுந் திருவடி யானும்,

90 பெருமணல் எக்கர்ச் சிறுகுடி வாழ்க்கைக் குறுமொழி மாக்கள் உறுமீன் படுத்தும் ஆழ்திரை மூழ்கி வீழ்மணி யெடுத்துங் கருங்கட லூர்ந்த வெள்வளை வாரியும் நிரைநிரை கரையிற் குவையினர் செல்ல

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/66&oldid=1586805" இலிருந்து மீள்விக்கப்பட்டது