உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் – 20

40

தளவரும் பென்ன வளங்கனிந் திலங்கி முன்னெழு மூக்கின் றன்மை யானும்,

ஓரருட் கடலிங் கீருரு வாகிக்

கரைபுணர்ந்து கிடந்த முறைமை போலப் புருவக்கொடி கடவாப் பெருவிழி யானும், விரையவிழ் தாமரை நறையுகுத் தென்னக் கேட்டொறும் இனிக்கும் பாட்டொடு தழீஇச் 45 செழுவாய் மலர்ந்த மொழியினானும், வலம்புரி யன்ன வானறுங் கழுத்தொடும் ஏற்றினத் தெருத்தின் முரிப்பெடுத் தன்ன குவவிப் புடைத்த பிடரி னானும், முழவெனச் சரிந்துவல் உலமெனத் திரண்டு

50

55

வரையென நிமிர்ந்துபின் எழுவெனத் திணிந்து மலையொடு பொருத மால்களி றென்று புலவோர் கூறும் பொருண்மொழி காட்ட யானை யென்னும் பானகு திருமொழி கொங்கை மருப்பின் நுங்கக் குத்தி

ஒருபாற் பெரும்போர் விளைப்ப, ஒருபால் வள்ளி யென்னுங் கள்ளவிழ் குழலாள் தடமுலை வேதிற் படுபுண் ஒற்ற

உளங்கொண் டெழீஇ யுறுமிடன் படாஅ

தொருபுறம் ஒற்ற வருமுறை நோக்கிக்

60 கொழுநனை பிணைத்த மராநறுந் தொடலை முறுவலித் தென்ன முறுக்குடைந் தசைய வாள்வலி நிலையுந் தோளி னானுங் கைவல் வேகடி ஐதுறக் கடைந்து வழுவழுப் பாக்கிய கொழுந்துகிர்ப் பலகை

65

புணர்ந்தொருங் கிரண்டு கிடந்தது போலக் கண்ணகன் றோங்கிய கவின்கெழு மார்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/65&oldid=1586803" இலிருந்து மீள்விக்கப்பட்டது