உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

10 செம்மணிப் பலகையின் அம்மணி குயிற்றி வரம்புற விடுத்த வண்ணம் போலப் புருவக்கொடி படர்ந்த விரிநுத லானும், அந்நுதல் கிளர்ந்த பொன்போற் செவ்விழி உத்தி என்னுந் துத்திப் பையர

15

முடிமேன் மணியெனக் குடிகொள லானும், வெண்பனித் திரளைக் கண்ணுறப் போழ்ந்து துவர்நிறம் ஊட்டிச் சிவணுற அமைத்தாங் கிருபுறங் கதுப்பு மருவுத லானுங்,

குழையொடு கெழுமுந் தழைசெவி யிரண்டும்

20 ஓவெனும் வடிவொடு மேவுத லானும் நடுவிற் குழிந்து வட்டித் தமைந்த படுபொற் கிண்ணம் முகங்கவிழ்த் தன்ன மோவாய் நிவந்த முறைமை யானுங், “கிளையரி நாணற் கிழங்கு மணற்கீன்ற

25

30

35

66

முளையும்” முருந்தும் விளைநீர் முத்தமுங் கூர்ந்து நிரைந்து வல்லென ஒளிவிரிந் தெழுந்தொளி ரெயிற்றொடு பொருந்துத லானுங், கொவ்வைக் கனியுங் கொழுவிய பவழமுஞ் செவ்விய அல்லென இலவிதழ் புரையுஞ்

செந்நீர் இதழொடு மன்னுத லானும், முத்தக் கோவை முறைமுறை வைத்த நத்துவர்ச் செப்பு நன்கனந் திறந்தென அரக்குரு வூட்டிய ஆம்பல் நறுமுகை தளைநெகிழ்ந் தலர்ந்த தன்மைத் தென்ன முள்ளெயிறிலங்க நகுதொறும் நகுதொறுஞ் செவ்வாய் தோன்றும் அவ்வாற் றானும், எழுமிடங் குழிந்து விழுமிதின் ஒழுகித்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/64&oldid=1586802" இலிருந்து மீள்விக்கப்பட்டது