உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் - 20

நிரைநிரை வாரா துரைநனி குழறப் பொறிவழி அறிவுஞ் செறியும் உட்கருவியும்

பலவழிக் கவரா தொருவழி நிகழ

120 அன்புரு வாகுநின் தொண்டர் போல

நீங்கா அன்பின் நிலைநின்

றியாங்ஙனம் பெறுவெனோ பாங்குபட மொழிமோ!

20. தோழி கிள்ளையைத் தூதுவேண்டல்

மொழியுங் குழற முழுவுடம்பும் பைத்து

விழியுந் துயில்கூடா வெய்யோள் - பழியைத்

திருவொற்றிச் சேயோற் குரையாய்! கிளியே

யுருவுன்னை யொப்ப துணர்ந்து.

21. அருணிலையுணர்த்தல்

உணர்ந்தார் அறிவினுந் தோன்றா தொளிக்கும் ஒருமுருகன் இணர்ந்தார் சுரிகுழன் மங்கைய ரோடென் இருவிழியிற் புணர்ந்தா ரெயிலொற்றி மேவிய வாறு புனிறுசெல்லா வணந்தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மையன்றே

5

22. எழினலங் கூறி நெஞ்சறிவுறுத்தல் வண்புனல் நிலையில் தண்ணறல் போலவுந் தாமரை மொய்த்த வண்டினம் போலவும்

பளிங்கிற் றோய்ந்த நீனிறம் போலவுந் திருமுக மருங்கின் வருமுறை துணர்ந்தாங்

கிடையிடை சுரிந்து நீண்டு கடைகுழன்று கண்ணொளி கதுவுங் குஞ்சியை யன்னை இருபாற் கூறிட் டொருபாற் சூழியும், மற் றொருபாற் பனிச்சையுந் திருவதின் அமைப்ப நறுங்கதுப் பொளிரும் பெருஞ்சிறப் பானுஞ்,

(19)

(20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/63&oldid=1586801" இலிருந்து மீள்விக்கப்பட்டது