உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை நாராயணன் எனுங் குருவனு மல்லேன்; களவியல் தனக்குப் பலபட வியம்பிப்

90

பளகறு நன்பொருள் தெளியா துழன்ற புலவோர் களிப்ப நலமுறத் தோன்றி

95

மெய்ப்பொருள் காட்டித் தமிழ்வழிப் படுத்தும், புல்லமண் மிகுந்து நல்லுணர் வழிந்து பெரும்பெயர் வழுதியும் அருந்தமிழ்க் கூடலும்

உய்வழி காணா துழிதரு காலை

ஒய்யெனப் போந்து மெய்ந்நெறி காட்டியுந்,

தண்அருள் புரிந்த நின்னே போலச்,

செந்தமிழ் வழக்கு முந்துற விரித்து முடிநிலைச் சைவம் விடிஞாயிறெனப்

100 பைங்கதிர் விரித்துக் கங்குலிற் கூம்பிய விரையவிழ் தாமரை புரையுர வோருளம் புரிஞெகிழ்ந் தலரத் தருமியல் சிறப்ப

உரையினுங் கருத்தினும் வரையமை நோக்கினும் பொருந்தக் காட்டி வருந்திறன் மிகுத்து

105 மலைவுபடு முள்ளத் தறிவொடு கூடாச் சிறுபுன் மாந்தர் குறுமொழி களைந்து நின்புகழ் விரிக்கும் அன்பிற் சிறந்த சோம சுந்தர குருவனு மல்லேன்;

110

பொருள்பெரி தீட்டப் பெருகுறும் அவாவினும்

ஈட்டிய ஒண்பொருள் இவறிக் கூட்டி மக்களும் மனைவியுந் துய்க்க நல்கி நின்கழல் வணங்கா இன்னா மடியினும் அரிய நாட்களை வறிதே போக்கி அறந்திறம் புளியிற் சிறந்தனென் மன்னே;

115 இனைய தீயென்நின் நினைவருந் திருவடி விழிநீர் உறைப்ப முழுமெயும் பனிப்ப

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/62&oldid=1586800" இலிருந்து மீள்விக்கப்பட்டது