உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

60

  • மறைமலையம் - 20

சிவனையே முதலெனச் சிவணிய காட்சியுஞ், சீரிதின் இயைந்த கீரன் போலச்,

சொற்றொறுஞ் சுரக்கும், அற்றமில் இன்பமும் பட்டாங்கு கிளக்கும் முட்டறு சிறப்புங் கன்னெஞ்சு நெகிழ்த்தும் அன்புறு மொழியும் 65 ஒருவழிச் சிறப்ப வருமுறை கொளீஇ யாற்றுப் படைசொலும் ஆற்றலு மில்லேன்; ஆங்கதன் கருவாய் உள்ளுறை நுண்பொருள் விழுமிதின் எடுத்து வழுவற அமைத்துத் தொண்ட ராரத் தண்டாது கொடுத்து, நின்

70 றிருவடிக் கிடந்த பெருகிய அன்பினுந் தமிழ்வரம் புணர்ந்த கமழுறும் அறிவினும் உரைத்திறம் நிலையிடும் வரைப்படா விறலினுந் தானே தனக்கு நிகரென விளங்கிய

75

80

நச்சினார்க் கினியனும் அல்லேன்; நிச்சலும்

வருக்கைச் சுளையும் பொருக்கரை மாவுங்

கொழுங்கனி வாழையுஞ் செழுஞ்சுவைக் கன்னலும் ஒருங்குதலை மயங்கிய அரும்பெருங் கலவையின் அருஞ்சொல் வழக்கமுந் திருந்திய நடையும் வண்ண வேற்றுமையுந் தண்ணெனும் ஒழுக்கமும்

ஒன்று நிரம்பிய குன்றாத் திருப்புகழ்

வேறுவே றியம்பிய வீறுறு தவத்தின் அருண கிரியெனும் பெரியனும் அல்லேன்; நூலிடை வைத்த வாலிய பொருளினும் உரையிடை விரிந்த புரையமை தெளிவினுங்

85 கேட்போர் உணரப் பாற்பட வகுத்து நின்புகழ் அனைத்துந் தன்பெரு மதியின் உளங்கொள விளக்கும் வளங்கெழு புலமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/61&oldid=1586799" இலிருந்து மீள்விக்கப்பட்டது