உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை மேனிலை நின்று வான்பொரு ளுணர்ந்தும் ஊழி யூழியும் ஓவின்றி நோற்பப்,

போழ்மதிச் சடையோன் போதா னாகக்,

35 கொழுங்குறை தன்மெயிற் பலமுறை தடிந்தும் உறுப்பினை யீர்ந்து நெறிப்பட வீசியும், பச்சிளங் குருதியை நச்சி யுகுத்தும், உயிர்ப்பலி வேள்வியிற் கடன்பல கழிப்பி யரிதின் முயன்ற பின்றையும் புரிசடைப்

40

பெரியோன் போந்தில னாக, எரிகிளர் வேள்வியாற்றும் ஆழ்குழியின்

வைந்நுனைய எழுநிறீஇ

முழுவுடம்பும் பழுதுபடப்

போழ்ந்து படுத்துப் பொன்றத், தம்பியர்

45

பாய்வதற் கூக்கிய காலை, வேய்புரை

பணைத்தோட் பாவையுந் தானுமாங் கெழுந்து வானவர் தலைவன் சீரிதின் அருளிய

வரம்பெறு பெருமையின் உரம்பெரி தெய்திநின் சீறடித் தாமரை வேறின்றி வைகும்

50 அழியாப் பேற்றின் வழிவழிச் சிறந்த சூர்முதல் போலப் பேரன் பில்லேன்; ஆலவாய் அமர்ந்த அழனிறக் கடவுள் செந்தமிழ் வழக்கு முந்துநின் றிசைப்பக் கடாவிடை நிகழ்த்துந் தடாப்பெரும் பேறும்,

55 இறைவன் கண்ட பொருள்வரம் பறிந்து

சொன்னெறி மாட்சியும் பொருணெறி மாட்சியும் அளவையின் விளைவுந் தெளிவுற விரித்துச் சுவைபெற வுரைத்த நவையில் புலமையும், மறைப்பொருட் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/60&oldid=1586798" இலிருந்து மீள்விக்கப்பட்டது