உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

5

10

15

20

  • மறைமலையம்

20

பொறியெனத் தோன்றி வெறிகமழ் சுனையில் அறுவர் ஊட்டிய நறும்பான் மாந்தி

அறுவே றுருவின் விளையாட் டயர்ந்தாங் கம்மையும் அப்பனும் அணையச் செம்மையின் உலகு புரந்தருளும் உமைதிரு மடியில்

அறுவேர் உருவும் ஒருவடி வாகி

விளையாட் டமர்ந்த இளையோய்! உழைப்பிரிந்து

நற்றவர் ஓங்கும் ஒற்றி மாநகர்

வெற்றி வைவேல் ஒருதிறம் பொலியப் பளிக்கறைப் புகுந்த ஒளிப்பரு மதியின் முறைமுறை மிளிர்நது நிறைகவின் பொழியூந் திருமுகச் செல்வியர் இருபுறம் விளங்க உலகெலாம் விழுங்கும் அலகிலா வன்றிறற் களிக்கரு மஞ்ஞையின் நலப்பட அமர்ந்தென் விழியெதிர் தோன்றிய அழியாப் பெரியோய்! தீயிடை நின்றும், நீரிடை மூழ்கியும், மரமே லிவர்ந்து தலைகீழ்த் தொங்கியும், அறுவகை யிருக்கையில் நெறிபட இருந்தும் புறம்படுத் திழுத்தாங் ககம்பட நிறைத்துத் தெளிநிலை முகிழ்க்கும் வளிநிலை யுழன்றுந், தன்றொழில் தபுத்துத் தனிமுதற் பொருளின் அருளெனும் வெள்ளம் வரம்பிற மிகுந்து

25 நிலையும் இடனென உலகெலாம் நோக்கியும், ஐம்பெரும் பூதமும் ஐம்புறம் நிறீஇ

ஐவகைத் தேவும் ஆங்காங் கமைத்துப்

பொய்ம்முறை யின்றி மெய்ம்முறை பரவியுங், கருவியும் புலனும் புரிவின்றி நிகழ

30 ஒருமுதற் பொருளொடும் அறிவினைக் கடவியும், இருவகை நிலையும் ஒருமுறை யிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/59&oldid=1586796" இலிருந்து மீள்விக்கப்பட்டது