உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை 150 வரைவிலங்கி யோடும் மின்னே போல

அரம்பொரு வைவேல் உரங்கிடந் தொளிரத், திருமான் முகத்தின் இருவிழி யென்ன மஞ்ஞையிற் கிடந்த விருதாள் மலர, அஞ்ஞையர் இருவரும் இருமருங் கிருப்ப,

155 அமைத்த கையும் அருடரு கையும்

இமைப்ப தில்லாத் தேவரும் பிறருங்

கண்டுகண் டுவப்பக் கவின் றுநனி விளங்குங் காண்டகு கோலந் தழீஇ மாண்டக, என்

கண்ணெதிர் பொலிந்தநின் இன்னருள் நினைப்பின்

160 வயாவுறு நோயும் பாரா தீன்ற

புதல்வோற் கண்டு களிக்குஞ்

சிதைவில் தாயின் அருளினும் பெரிதே.

17. நெஞ்சறிவுறுத்தல்

தேவா திருவொற்றிச் சேவார் புதல்வஎன நாவார வாழ்த்தி நடம்புரிவாய்! - ஆவா

வியந்து பிழைசெய்யும் நன்னெஞ்சே வேலோன் நயந்துன் எதிர்தோன்று நாள்.

18. தன்னுட் கையா றெய்திடு கிளவி

நாளான் மலர்ந்து மனக்கினி யான்சென்ற நாளறிந்து வாளார் மடலின் அளியேம் உயிர்போழ் வகையுமன்றிக் கோளான சொல்லிப் புணர்ந்தார் கரியுங் குறிப்பறியாய் கேளான மெய்யும் முடங்குமொற் றிக்கழிக் கேதகையே

19. அருணிலை பெறுத லரிதென மொழிதல்

கேதகை பழித்த மாதொரு கூறற்கு

நுதல்கிழித் திமைக்குங் கதங்கெழு விழியிற்

33

(16)

(17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/58&oldid=1586795" இலிருந்து மீள்விக்கப்பட்டது