உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

  • மறைமலையம் 20

120 துன்பமொடு முரணித் துய்ப்பதோ வன்றே,

முகிழ்நகை மாதர் குழுவொடு கெழீஇ இதழ்சுவைத் திருக்குந் திறத்ததோ வன்றே, ஒன்றினும் பற்றாது தன்றிறத் தெழூஉங்

குன்றலில் பொருளோ வன்றே, தொண்டரெனும்

125 வண்டினங் குழுமிக் கொண்டி கொள்ளும்நின் திருவடித் தாமரை யதுவென மொழிவித் தென்னையும் உய்யக் கொண்டு, பின்னும் மறைநவில் அந்தணர் வைகறை யுணர்ந்து வாவி குடைந்தார்க்குந் தீவிய வோதையுந், 130 தாமரைப் பள்ளித் துயிலுணர் புள்ளினம் பார்ப்பொடு கெழீஇச் சிலம்பும் ஓசையுஞ், சிறுநுதற் கருங்கட் குறுந்தொடி மகளிர் குங்குமச் சாந்துங் கொங்குலாங் கூந்தலும் பால்கெழு தன்மையிற் பலவே றழீஇ

135 நீனிற முகிலின் மறையும் மின்போல் நீர்மூழ் காடும் பேர்விலார்ப் பொலியுந், திருவின் செல்வி யருமையிற் பெற்ற குறுநடைச் சிறுவர் சிறுதே ருருட்டித் திறல்கெழு மறவர் மற்பயில் கழகத்துக்

140 கைபுடைத் தார்க்கும் இசையினுஞ் சிறந்து விட்டுவிட் டிசைக்கும் மட்டில் கம்பலையும் ஓவாது கறங்கும் ஒற்றி மாநகர் தாவா இளமை தலைத்தலை சிறப்பப் பன்னிரு விழியெனுங் கண்ணகன் சுனையில்

145 அருளெனும் அருவி விரிவுறப் பெருகி

முழவுத் தோளெனுங் கொழுவிய குன்றிற் பன்முகம் பரந்து தண்ணெனச் செல்ல, நித்திலம் பெய்த விழுத்துவர்ச் செப்பின் மூய்திறந் தன்ன வாய்நகை தோன்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/57&oldid=1586794" இலிருந்து மீள்விக்கப்பட்டது