உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

73

ஒரு

பயிற்சிக்கும் தமிழ் மொழிப் பெருக்கத்திற்கும் பேரிடையூறாய்த் தோன்றிய பவணந்தியர் எம்மனோராற் பாராட்டப்படுதற்குரிய ரல்லர். பிறரவரை எங்ஙனம் பாராட்டினும் பாராட்டுக! அவரவர்க்குரிய மதிப்புப்பற்றி அவரவரைப் பாராட்டுவா மல்லது, வேறு கூறக் கடமைப் பட்டிலோம். இது நிற்க, இதுகாறும் யாம் குறித்து நிகழ்த்திய வழக்குரையை நடுநிலை பிறழாது முன்போற் செவ்விதி னாய்ந்து தம தரிய கருத்தை வெளியிடுவார்களாக வென்று நம் நண்பர் சண்முகம் பிள்ளை யவர்களை வேண்டிக்கொள்ளு கின்றாம்.*

சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முற்றும் -

  • சுவாமியவர்கள் எழுதிய இவ்வழக்குரைமீது ஸ்ரீமாந். சண்முகம் பிள்ளையவர்கள் ஏதும் எழுதினார்க ளில்லை. - பதிப்பாசிரியன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/106&oldid=1587213" இலிருந்து மீள்விக்கப்பட்டது