உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் – 21

கருத்துணர்

மாட்டாமல்

-

தால்காப்பியனார் ரோவிடங்களில் வழுவியுங் கூறினார். தமிழிலே ஐந்திலக் கணமும் வழுவின்றி மிகச் சுருங்காமலும் மிகப் பெருகாமலும் முற்ற வெடுத்து முடிவு தோன்றக் கூறிய நூல் தொல்காப்பியம் ஒன்றேயாம். இந்நூலுணர்ந்தார் தமிழியலறிவு நன்குவாய்ப்பப் பெற்றாராவர். இவ்விழுமிய நூலையும் மாணக்கர் பயில வொடாமல் பவணந்தியார் நன்னூலெழுதியது எற்றுக்கு? அற்றன்று, தொல்காப்பியம் உணர்தற்கரிதாய்ப் பெருகிக் கிடத்தலால் அதனைச் சுருக்கி நன்னூலியற்றினாரெனின்; பெருக்க சுருக்கமென்பன அவ்விருவகைக் குணங்களுமுடைய இருநூல்கள் தோன்றினல்லாற் றாமே ஒருவர்க்கு விளங்கா. மக்கள் மனவியற்கை எளிய தொன்றனையே பற்ற முந்துறும். அஃது அதன்கண் இயற்கையாயுள்ள மடமைக் குணத்தினானே யாம். நன்னூலினுஞ் சுருங்கிய நூலொன்று ஏனை யொருவர் இயற்றிடுவராயின் அதனையே எவரும் பயில முந்துவார். எத்தனை பேர் மகாலிங்கைய ரிலக்கணம், போப்பையரிலக்கணம் முதலியவற்றின் பயற்சியோடு நின்று விடுகின்றார்! இனி, நன்னூல் சுருக்கமாவ தொன்றாயினும் அதன் பயிற்சி யொன்றானே தமிழறிவு நிரம்பு மெனின், அது சால்புடைத்தாம். அவ்வாறின்றி அதன்கணடங்கா மல் வேறுணரற்பாலனவாம் பொருட் கூறுபாடுகள் பலவாகப் பெருகிக் கிடத்தலானும், அப்பலவு மொருங்கெடுத்து முடியக் கூறுநூல் தொல்காப்பிய மொன்றே யாதலானும் தமிழியலறிவு நிரம்பவேண்டுவார் தால்காப்பியமொன்றே பயிலுதற்குரியர். தமிழியலறவு நிரம்புதற்குரிய பொருள்களின்றி வாளாது சுருங்கிக் கிடக்கும் நூல்களைச் சுருக்கஞ் சுருக்கமென்று பயின்றா லாவதென்னை? புலமை முற்றுதற்குரிய நூலறிவு இன்றியமையாத தான்றாகலின் அது செயவல்ல தொல்காப்பியமே வாய்ப்புடைத்தாம். அயகோ! அது பெரிய தொரு நூலாயிற்றே என்று மறுக்க முறுவராலெனின்;- நூனுட்பமறியாது கடாயினாய், இஞ்ஞான்றை ஆங்கில மொழியில் பரந்த இயற்பொருள் மெய்ப்பொருள் நூலாராய்ச்சி செய்வார் பலர்க்கும் தொல்காப்பியநூல் மிகச் சுருங்கியதொன்றாய்த் தோன்றுமாகலின், அதன் பயிற்சி நீ மயங்குமாறுபோற் பெரிய தன்றென்று தெற்றெனத் துணிக. ஆகவே, தொல்காப்பியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/105&oldid=1587212" இலிருந்து மீள்விக்கப்பட்டது